காலம்: கி.பி. 15ம் நூற்றாண்டு.

இடம்: மானாமதுரை (வாணாதிராய மதுரை) மதுரை/அழகர்மலை

சிறப்பு: அனைத்து நாணயங்களிலும் ஒரு பக்கம் 'கருடன்' படம் பொறிக்கப்பட்டுள்ளது.




”தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!” என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்து மதுரையை அடுத்த திருநகரில் 6.8.1962 ஆம் நாள் ”தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்!” என்னும் நோக்கத்தையும் முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார்.

தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ Yes sir என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர் இவரே. இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.

குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை.

மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். "தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்" என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.



1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சா நெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். ”அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர்!” என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.

1944 முதல் 1947 வரை இவர் நடத்திய 'சங்க இலக்கியம்' வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.

வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு 'குறள்நெறி' என்னும் இதழையும், Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார். விருதுநகரில் இருந்தபோது ’இலக்கியம்’ (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது ’திராவிடக்கூட்டரசு’ போன்ற இதழ்களையும் நடத்தினார்

பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும் பெருமாள்.





இத்தகைய பெருமைக்குரிய சி.இலக்குவனாரின் நூல்கள் பட்டியல்கள்:-


எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933) மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)

துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)

தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)

என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)

அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)

அம்மூவனார் (ஆராய்ச்சி)

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)

திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)

தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)

மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956) வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)

வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)

கருமவீரர் காமராசர் (வரலாறு)

அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)

தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)

தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)

சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)

Tholkappiyam in English with Critical Studies

Tamil Language (1959)

The Making of Tamil Grammar

Brief Study of Tamil words


சோழநாட்டிலுள்ள நாகை மாவட்டத்தின் திருமறைக்காட்டிற்கு அருகேயுள்ள வாய்மைமேட்டில் மு.சிங்காரவேலத்தேவருக்கும் - அ.இரத்தினம் அம்மையாருக்கும் பிறப்பெடுத்த பெருந்தமிழர் முனைவர் சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!




அகமுடையார்களெல்லாம் பசும்பொன்னுக்கு செல்லுங்கள்; செல்லாமல் இருங்கள்; அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "திருப்பத்தூருக்கும் - காளையார் கோவிலுக்கும் ஸ்டாலின் வரவில்லை, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் வரவில்லை, திமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; முதல்வரோ, எதிர்க்கட்சித்தலைவரோ, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களோ, யாரும் வரவில்லை; ஆனால் பசும்பொன்னுக்கு மட்டும் இவர்கள் செல்கிறார்கள்; திட்டமிட்டே அகமுடையார்களை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்கின்றன." என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்படியான விமர்சனங்கள் தேவையே இல்லை. அப்படி விமர்சித்தே ஆக வேண்டுமென நீங்கள் விரும்பினால், அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூருக்கு வராத, அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலுக்கு வராத அகமுடையார்களை முதலில் விமர்சியுங்கள். குறிப்பாக திருப்பத்தூருக்கும், காளையார்கோவிலுக்கும் வராமல், அக்டோபர் 30ஆம் தேதி மட்டும் பசும்பொன் செல்லும் அகமுடையார்களை விமர்சியுங்கள். இந்த விசயத்தில் முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல் கட்சி தலைவர்களல்ல; அவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை. அவர்கள் ஓட்டுரசியல் செய்யும் தலைவர்கள். அவர்களின் பார்வையில், கள்ளர் - மறவர் - அகமுடையர் என்ற 'சோ கால்டு' முக்குலத்தோர் போற்றும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் சென்று வந்தால், நமக்கும் அவர்களது ஆதரவு கிடைக்கும்; ஓட்டுரசியலுக்கு இந்த வாக்கு வங்கி தேர்தல் நேரங்களில் தங்களுக்கு பயன்படுமென்ற நம்பிக்கையில் தான் வருகின்றனர். அப்படியான அரசியல் கணக்கீடுகளோடு பசும்பொன் வருபவர்களை விமர்சிப்பது வீண்.

போலியான முக்குலத்தோர் அரசியலை நம்பி விலாங்கு மீன் போல, 'அகமுடையார் ஒற்றுமை - முக்குலத்தோர் ஒற்றுமை' என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் அகமுடையார்களிடம் முதலில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்கள்தொகை எண்ணிக்கையிலும், விகிதிச்சார அடிப்படையிலும், அகமுடையாருக்கு கிடைத்திருக்க வேண்டிய அரசியல் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவே இல்லை என்பதை தெளிவு படுத்துங்கள். அகமுடையாருக்கான தொகுதிகளை, பதவிகளை, கள்ளரும் - மறவரும் 'சோ கால்டு' முக்குலத்தோர் என்ற முகமூடிகளால் ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துங்கள்.

அக்டோபர் 24ல் திருப்பத்தூருக்கோ, அக்டோபர் 27ல் காளையார் கோவிலுக்கோ, எத்தனை கள்ளர் / மறவர் வந்து போகிறார்கள்? வரவே இல்லையென்றும் சொல்ல முடியாது; ஆனால் பசும்பொன்னுக்கு செல்பவர்களில் எத்தனை சதவீதம் பேர் காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வந்தார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அமைப்பு சார்ந்தோ, தங்களது தலைவர்களுக்காகவோ ஒருவேளை அவர்கள் வந்திருக்கலாம். தனித்து, கள்ளரும் மறவரும் காளையார்கோவில் / திருப்பத்தூர் வந்திருப்பார்களா என்றால், மிக சொற்பமான எண்ணிக்கையில் வந்து இருக்கலாம். ஆனால் அகமுடையார்களின் நிலைப்பாடோ வேறொன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கோ, காளையார்கோவிலுக்கோ வருகிறார்களோ இல்லையோ, ஆனால் பசும்பொன்னுக்கு அகமுடையார்கள் செல்கின்றனர். இந்த விசயத்தில் மனமாற்றம் ஏற்படாத வரை, வெளியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட போவதே இல்லை.

அகமுடையார்கள் பசும்பொன்னுக்கு போவதோ, போகாமலிருப்பதோ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வரவே மாட்டேன்; ஆனால் பசும்பொன்னுக்கு கண்டிப்பாக செல்வேனென இப்படியான எண்ணவோட்டத்தில் இருக்கும் அகமுடையார்கள் மாறாதவரை, ஹிந்திய தேசிய / திராவிட / தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் பார்வையும் மாறாது. அவர்களை விமர்சிக்கும் முன், இதுமாதிரி நமக்குள்ளேயே உள்ள முரண்களை கலைந்து, குறைகளை சரிசெய்ய நாம்தான் முன்வர வேண்டும். அப்போது தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் முழுமையாக கிடைக்க வாய்ப்புகளும் உருவாகும்.

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக,  கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.

பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும்  கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.





ஆற்காடு இராமசாமி முதலியார்:

ஆற்காடு இலட்சுமணசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர்; நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார். 1920 லிருந்து 1934 வரை தொடர்ச்சியாக சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். சென்னை மாநகரத்தின் தலைவராய் பொறுப்பேற்றவுடன், மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார். ஐதராபாத் பிரச்சினையைக் கையாள அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்விட்சர்லாந்து சென்று அங்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் சார்பில் வாதாடி ஐதராபாத் நகரத்தை இந்தியாவுடன் இணைத்த பெருமை இவருடையதே. பிறகு மத்திய அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு சிறந்த பணி ஆற்றினார். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தின. மேலும், இந்திய அரசு சார்பில் பத்மவிபூஷன் பட்டம் அளிக்கப்பட்டது.


ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார்:


ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவர் 1983 ஆண்டு எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் இந்திய மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர். உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார். இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இலட்சுமணசாமி முதலியார் சிறந்த கட்டிடக் கலை நிபுணரும் ஆவார். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், அங்குள்ள பட்டமளிப்பு மண்டபம் (இப்போது தொலைதூரக் கல்வி இயக்கமும், பல பெரிய அரசு விழாக்களும் அங்கு நடத்தப்படுகிறது.) ஆகியவைகள் இவரால் கட்டப்பெற்றன.

சென்னை தரமணியில் இயங்கிவரும் ஐ.ஐ.டி. நிறுவனமும் இலட்சுமணசாமி முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு இன்றும் உலகளாவிய புகழ்பெற்று வருகிறது. அந்நிறு வனத்தில் இலட்சுமணசாமி முதலியாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அகில இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு இந்தியில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, ஆங்கிலத்தில் தென்னிந்திய மக்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் இவர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்த பெருமைக்குரியவர்களான வழக்குரைஞர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் மற்றும் மருத்துவர் சர் ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார் என்ற ஆற்காடு இரட்டையர்களுக்கு 130 வது பிறந்த நாளில் புகழ் வணக்கம்!





பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)

குலம்: அகமுடையார்

குரு: சட்டை முனி

ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:



  • சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்

  • சுந்தரானந்தர் சோதிட காவியம்
  • சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
  • சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
  • சுந்தரானந்தர் கேசரி
  • சுந்தரானந்தர் மூப்பு
  • சுந்தரானந்தர் தண்டகம்
  • சுந்தரானந்தர் காவியம்
  • சுந்தரானந்தர் சுத்த ஞானம்
  • சுந்தரானந்தர் தீட்சா விதி
  • சுந்தரானந்தர் பூசா விதி
  • சுந்தரானந்தர் அதிசய காரணம்
  • சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)


பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)


சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)


தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)


பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)


சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.


மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.






1


மூவுலகை காத்தருளும் ஈசா உந்தன்
முடிவுயில்லா திருவடியை பணிந்து போற்றி
மேவுமொரு பராபரையின் அருளை கொண்டு
மொழிந்திடுவோம் பிருகுயான் சீவ சூட்சம்

2


சூட்சமாய் எங்களது குடிலம் தொட்டு
சுகப்படுத்தும் பூசைவிதி காலம் தன்னை
நுட்பமாய் XXXXXXXXX மகன் தனக்கு
நடப்புவழி ஆசியதை சித்தம் கொண்டான்


3


கொண்டவிதம் மாந்தர்களும் அறியும் வண்ணம்
குருவாக யாமிருந்து விளம்பி வாறோம்
விண்ணமற சித்தர்களை போற்றி நின்று
வித்தரிக்க ஆன்மபலம் இம்மாந்தர்கள் அறிய

4


அரியபல பொதுஞானம் அறிவுரைகள்
அகமகிழ்ந்து இக்காலம் விடயம் கூற
குறிப்பான தனுர் திங்கள் ஏகாதசியும்
கோமகளின் வால்பிடித்து பித்ருக்கள் யாவும்


5


பிதுர்கள்யாவும் திருப்திக்க லோகத்தோர்கள்
பூரணமாய் நிச்சயித்த அனுட்டிப்பாலே
மாதவனாம் ஆசிபடவும் அரண் அயனின்
மலர்பாதங்கள் நாடிடவும் பொருட்டு எங்கள்


6


எங்களது பூசை யதை நிச்சயித்தோம்
எதிர் நோக்கா வந்தாலும் அவர்களுக்கு
மங்களங்கள் தான் அளித்து மறுசுகமும்
மகத்துவமும் பெறும்பொருட்டு திங்கள்தோறும்


7


திங்கள்தோறும் குருமார்க்க நியதி கொண்டோர்
தனக்குரிய ஆசிரமத்தில் நினைவு கொண்டு
மங்களமாய் சங்கமித்து தியானம் கொள்ள
மொழியுரைத்தோம் இயமம்யதும் கடந்து ஞான


8


ஞானமெனும் ஆத்துமநிலை பொலிவும் ஒங்க
ஞானமதின் புருடர்களுக்கு ஜெனன காலம்
தான்என்ற எல்லையில்லை அவர்கள் சிந்தை
தனைகொள்ள விண்மீனும் கடை மீனாய்


9


மீனதிலே கலசமதின் திங்கள் தன்னில்
முக்கியமாய் சுந்தரனந்தன் தன்னை நன்றாய்
ஊனமில்லா நினைவுறுத்தி பூசை கொள்வீர்
உத்தமமாய் நெடியதொரு குருபக்தி கொண்டான்


10


கொண்டமகன் சட்டைமுனி ஞானம் பெற்று
குருவினது போதனைகள் யாவும் பெற்று
விண்ணமிலா விட நிவாரணம் வாக்கியஞானம்
விளம்பநல் கோள்ஞானம் முப்பு ஞானம்


11


ஞானமதாம் கிருஷிகளும் மூலி சூட்சம்
ஞால தீட்சை பூசையதாம் விதியது செய்தான்
மோனமென்ற நிலையிவன் நின்றால் கூட
முக்கியமாய் உயிர்கள்எல்லாம் உய்யும் பொருட்டு


12


பொருட்டுமே வல்லபங்கள் செய்ததாலே
பூரணமாய் அந்நாமம் பெற்றார் திண்ணம்
குருமுனியின் அருள்பெற்று ஞான லிங்கம்
காண நலம் சதுரகிரியில் செய்தானப்பா


13


அப்பனே அவனுக்குரிய மூலம் தன்னை
அகம்நிறுத்த வல்லதொரு மூலம் அப்பா
செப்பவே ஒம் XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சீர்பெற்ற ஓம் சுந்தரனந்தன் எனும் வல்லபனே


15


வல்லபனே என்றழைத்து சோதி கொண்டால்
வந்திடுவார் தங்கமயமான ஆனந்தனாக
நல்லதொரு விழாப்பொருட்டு மாந்தர் சூழ
நலமான அன்னமுடன் விடமுறிவான


16


விடமுறிவான ஔடதங்கள் ஈய நன்மை
வாக்குப்படி நாகமதின் பாம்பு போன்ற
விடமெல்லாம் வசியமது ஆகும் அப்பா
வீர்யமாய் லோகத்தோரின் அறியா பீடை


17


பீடையெல்லாம் முறிக்கவே சித்தம் கொண்டார்
பிசகில்லா வரவேற்று ஆசி கொள்வீர்
சோடை யில்லா கூடலதனின் நாதனம்மை
சீர்பெற்ற அழகனவன் ஆசி நன்றாய்


18


நன்றான #அகமுடையான் என்று சித்தர்
நீடுழி குலபந்தம் கொண்டார்கள் அப்பா
முன்னம்பல ஞானவழி கொண்ட சங்கமம்
மொழிந்தோமே சீவமதாம் சூட்சம் முற்றே




(நன்றி: ஹரி மணிகண்டன், சதானந்தா சுவாமிகள் தளம்)


எம்.ஜி.ஆருக்கும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருக்கும் பல ஒற்றுமை உண்டு. அவற்றுள் ஒன்று, மருதூர்.

எம்.ஜி.ஆரின் முழுப்பெயர்:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரின் முழுப்பெயர்:மருதூர் மருதாசலமூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்.

அகமுடையார்களில் பலருக்கு இன்றைய கேரளத்தில் குலதெய்வ கோவிலும், திருமண உறவும் உண்டு. போக்குவரத்து சிரமங்களுக்காக கேரளாவிலிருந்து பிடிமண் எடுத்து வந்து அதே பெயரில் தங்களது பகுதியிலேயே குலசாமி கோவிலை கட்டியெழுப்பினார்கள். சேரநாடு என்ற பெயரில் ஆதித்தமிழகமாக இருந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியபட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள மருதூர் ஐயனார் கோவில் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த மருதூர் ஐயனார் கோவிலானது கேரளாவில் உள்ள கோவில்; இந்த ஐயனார் தான் எம்.ஜி.ஆரின் குலசாமி; இதே மருதூர் தான் எம்.ஜி.ஆரின் பூர்வீக ஊர்; இவையெல்லாம் கவனிக்கதக்க விசயம். கேரளாவிலுள்ள நாயர் சாதி என்பது பல இனக்குழுக்களின் கூட்டமைக்காகவே பிற்காலங்களில் உருவெடுத்தது. 13ம் நூற்றாண்டில் சேரநாடான கேராளவில் ஏற்பட்ட எழுச்சியில் அகம்படியர் மற்றும் வேளாளர் (நாயர்) என்போர் ஈடுபட்டதாக வரலாற்று குறிப்புகளை நோக்கும் போது, அகமுடையார்களின் கிளைக்குடிகளாக மேனன் பட்டமுள்ளோர் இருந்திருக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் தாய் தந்தை வழி குலசாமிகளான, மருதங்குடி மருதாருடையாரும், வாணியங்குடி மருதப்ப ஐயனாரும் கூட ஒருங்கிணைந்த இராமநாதபுரத்திற்கு (விருதுநகர், சிவகங்கை) அருகிலுள்ள ஊர்கள் என்பதும், அங்கெல்லாம் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், மருது என்பது இயல்பாக இவர்களுக்கு சூட்டும் பெயராகவும் இருப்பதை கவனித்தாலே பல வரலாற்று உண்மைகள் புரியும். வாணியங்குடி மருதப்ப ஐயனார் மற்றும் மருதங்குடி மருதாருடையார் என்பதன் நினைவாகவே மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு, வெள்ளை மருது - சின்ன மருது என்ற பெயர்கள் அவர்களுக்கு வைக்கப்பட்டது.

இதுபோலவே கோயம்புத்தூரிலும் ஒரு மருதூர் உண்டு; அவ்வூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மை. கோவை - திருச்சி சாலையிலிருந்து சிக்னலில் தெற்கு நோக்கி நஞ்சுண்டாபுரம் சாலையின் கிழக்கு பகுதி மருதூர், மேற்கு பகுதி இராமநாதபுரம், (ஸ்டாக் மார்க்கெட்டிலிருந்து சிக்னல் வரை உள்ள பகுதி மருதூர்) பொதுவாக கிழக்கால ஊர், மேற்கால ஊர் என அழைப்பார்கள், இரட்டை கிராமம்.

சோழநாடான டெல்டா பகுதியிலுள்ள அகமுடையார்களுக்கு தேவர் பட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல விருதுநகர் மாவட்டத்திலும் அகமுடையாருக்கு தேவர் பட்டமென்பதை பார்வார்ட் ப்ளாக் தேசியத்தலைவராக இருந்த ஏ.ஆர்.பெருமாள் தேவர் மூலமாகவும், இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட மருதூர் ஐயனார் கோவிலிலுள்ள பங்காளிகளின் பெயர் அச்சிடபட்டுள்ள அழைப்பிதழிலும், பெயர் பலகையிலும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யத்திற்கு அருகேயுள்ள மருதூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்த மருதூருக்கு அருகிலுள்ள ’கடிநெல்வயல்’ வேம்படி ஐயனார் / வேம்புடையார் கோவில் தான் எங்களுக்கு குலசாமி.

இதே வேம்புடையார் என்ற பெயர்கொண்ட ஐயனார் சிவகங்கை அருகிலுள்ள பில்லூரிலுள்ள முத்தையா கோவிலில் வீற்றிருக்கிறார்; அவ்வூருக்கு ஓரிருமைல் தொலைவில் தான் வேம்பத்தூர் என்ற ஊரும் இருக்கிறது. இந்த வேம்பத்தூரும், வேம்புடையாரும் தொடர்புடையதாக இருக்கலாம். இன்றைக்கு அந்த வேம்புடையார் என்ற பெயர், வேகமுடையார் என மாற்றமடைந்திருந்தாலும் வேம்புடையாராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். மேலும், அவ்வூரில் அகமுடையாரே பெரும்பான்மை என்பதும், பில்லூர் அகமுடையார் என்ற தனித்த அடையாளமும் அவர்களுக்கு உண்டு என்பது கூடுதல் தகவல். வேதாரண்யம் அருகிலுள்ள இந்த மருதூர் ஐயனார் கோவிலின் பெயரிலும் ’வாணர்’ என்ற பெயர் உள்ளீடாக இருக்கின்ற ‘துயில் வாண ஐயனார்’ என்பதை கவனித்தால் மாவலி பூமியின் வரலாற்று தொடர்பு எளிதில் விளங்கும்.


(இந்த பதிவோடு தொடர்புடைய படங்களெல்லாம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆருக்கும் அகமுடையாருக்கும் தொடர்புள்ள செய்திகளை பகிர்ந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன் ஐயாவுக்கும், அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளரான நண்பர் சோ.பாலமுருகனுக்கும், கோவை மருதூர் பற்றிய தகவல்களை தந்த பழ.செல்வராஜூ அண்ணனுக்கும் நன்றி.)






















"வாகை சூடும் சுகுண தேவராகும்
தமிழர் வானவ அகம்படியர் குல தேவி
வாணி மாதங்கி
திருகூடலூர் தங்கி வளர்வாம்
மீனாம்பிகை என் உமையாளே!"

- மீனாட்சி திருப்புகழ்



மதுரை மீனாட்சியை போற்றிய பாடல்களில் 'மீனாட்சி திருப்புகழ்' என்னும் பாடல் தொகுப்பும் ஒன்று. இப்பாடலை மகாகவி பாரதியாரின் சீடரான மணிமன்ற அடிகள் இயற்றிருக்கிறார்.



(நன்றி: கவிஞர் இரா.பொற்கைப்பாண்டியன், அண்ணன் வெங்கடேஷ்)





"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு" என்று வெளிப்படையாகவே தன்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்ட கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. தான் எழுதிய சினிமா பாடல்களில், அரசியல், காதல், தத்துவம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், அனுபவம் என அனைத்தையுமே விரிவாக வரிகளாக்கிய பெருமை கவியரசரை மட்டுமே சேரும்.

தன்னை கவிஞராக மட்டுமின்றி, நடிகராகவும், இதழாசிரியராகவும் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியவர். அதிலும் முக்கியமாக சிவகங்கையில் நகரத்தார் பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததால், சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பொருட்செலவில் 'சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைக்காவியத்தையும் தயாரித்து தன் ஊருக்கு பெருமை சேர்த்தவர். மேலும், கவியரசர் எப்போது வெளிநாடு போவதாக இருந்தாலும் அகமுடையார் குலத்தோன்றலான சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

"பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!"

இப்படியாக ஐயாயிரத்துகும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் மூலம், தமிழால் தமிழர்கள் மத்தியில் இன்று வரைக்கும் மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிநாட்டு முத்தையாவான கவியரசர் கண்ணதாசனின் இடத்தை நிரப்ப இன்னும் ஒரு கவிஞர் இதுவரை இங்கில்லை.

தான் அனுபவித்த வாழ்க்கையையே ஆய்வு செய்து எழுத்துகளாக்கி, எட்டாவது வரை படித்திருந்தாலும், யாரும் எட்டாத உயரத்தை அடைந்த கவியரசர் கண்ணதாசன் என்ற கவிதை பொக்கிஷம் அவதரித்த 91ம் அகவை நாள் இன்று!

புகழ் வணக்கம்!

அகம்படியர் குலத்தில் தோன்றிய தீவிர திருமுருக பக்தரான சித்தர் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி திருவான்மியூரில் அமைந்துள்ளது. சண்முக கவசம், பகை கடிதல், இரத பந்தம், பஞ்சாமிர்த வண்ணம், குமார ஸ்தவம், சண்முக நாமாவளி என பல ஆன்மீக எந்திர சூத்திரங்களை உருவாக்கியவர். ஒவ்வொரு திருமுருகன் ஆலயத்திலும், பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் எந்திரம் கோவில் உட்புற சுவரில் இருக்கும்.

இந்தியை முதன் முதலில் எதிர்த்தவர் 'தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார். சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். இந்த ஆண்டில் தான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 50ஆம் ஆண்டு விழாவும் தொடங்க உள்ளது. 1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர்.

இந்த உண்மைகளை மூடிமறைத்து இந்தி எதிர்ப்பு உணர்வை முதன் முதலில் தோற்றுவித்தவர் ஈ.வெ.ரா.பெரியார் என்றும், அவரே சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் 7.3.1926இல் தனது குடியரசு இதழில், "தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் ரகசியமும்" என்ற தலைப்பில் கட்டுரை தீட்டினார் என்றும் வரலாறு எழுதுவோர் ஆராய்ச்சி செய்யாது நுனிப்புல் மேய்வோராய் எழுதி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும்.

பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட "சேந்தன் செந்தமிழ்" எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது 'திருப்பா' எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:

பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது

" இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் "

தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.

(திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம். வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

எனவே, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதுவோர் இனியாவது ஈ.வெ.ரா.பெரியாருக்கு முன்னரே இந்தி எதிர்ப்புக்கான விதை ஊன்றிய பாம்பன் அடிகளாரை இந்தி எதிர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

(தகவல்: மு.வலவன் எழுதிய "முருகனைப் பாடிய மூவர்" நூலிலிருந்து.)

நன்றி: கதிர்நிலவன்






























அகமுடையார் குலத்தோன்றல் 'தமிழவேள்' கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை! இவர் மட்டும் முயற்சி எடுக்காவிட்டால் சாதி வகைபாட்டியலில் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்திருக்கவே முடியாது. இட ஒதுக்கீடே இல்லாமல் தவித்திருக்கும் சமூகமாய் அகமுடையார் இனக்குழு இன்றளவும் இருந்திருக்கும். தமிழை செம்மொழியாக்க வேண்டுமென 1919லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றிய, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்முதலாக பயன்படுத்திய பெருமைக்குரிய பெருந்தமிழருக்கு 134 வது புகழ் வணக்கம்!





  • சுந்தரனார் எழுதிய மணோன்மனியம் நூலிலுள்ள பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக முதன்முதலில் அறிமுக படுத்தியவர்.
  • ஸ்ரீமான், ஸ்ரீமதி போன்ற அந்நிய மொழியேற்றத்தை எதிர்த்து, திருமகன், திருவாட்டி என தனித்தமிழில் திருத்தியவர்.
  • பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற தனித்தமிழ் வார்த்தைகளை உருவாக்கி தந்தவர்.
  • 1911ம் ஆண்டில் ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக, தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர்.
  • பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.
  • தமிழ்ப்பொழில் என்ற தமிழ் மொழிக்கான மாத இதழை தொடங்கி தொடர்ச்சியாக நடத்தியவர்.
  • பார்பனரல்லாதவர் பட்டப்படிப்பு படிக்கவே இக்கட்டான சூழல் நிரம்பிய காலக்கட்டத்தில், அகமுடையார் இனக்குழுவில் பிறந்த இவர் சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.
  • தமிழை செம்மொழியாக்க வேண்டுமென்று 1900 காலக்கட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.
  • பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான 'நீதிக்கட்சி' தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தவர்.
  • முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு பெற வழி செய்தவர்.
  • "வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

இப்படியான பல பெருமைகளை கொண்ட தமிழவேள் உமா மகேசுவரன் பிள்ளையவர்கள், 07.05.1883ல் அவதரித்து 09.05.1941ல் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் புகழ் எப்போதும் மறையாது.

புகழ் வணக்கம்!






1818ம் ஆண்டு இதே மே 05ம் தேதியன்று பொதுவுடைமை சித்தாந்தத்தின் செங்கதிர்வேலனாய், மேற்கத்திய நாடான ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். இந்த மே 05க்கு அது மட்டுமே குறிப்பிடத்தக்க விசயமாக அமையவில்லை. கூடவே, நம் மண்ணிலும் இந்த மே 05ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாளாகி போனது. ஆம், வாட்டக்குடி இரணியன் என்ற பொதுவுடைமை போராளியும், காங்கிரஸ் சர்வாதிகாரத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று.

யார் இந்த வாட்டக்குடி இரணியன்?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர் - தையல் அம்மாளுக்கு, 1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்த மாவீரன் தான் வாட்டாக்குடி இரணியன்.
வாட்டாகுடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும் அகமுடையார் எனும் தமிழ் பெரும்குடியில் பிறந்து தாழ்த்தப்பட்ட மற்றும் விவசாயக் கூலி மக்களுக்காகப் போராடி தங்கள் உயிரை இழந்தவர்கள்.

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு, அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது. பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி, வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது. நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது. பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது. இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.

பின் சிங்கப்பூர் துறைமுக தொழிற்சங்கத்தின் தலைவராக செயலாற்றினார். அங்கு பணியாற்றும் போது தொழிற்சங்க பணியும் தோழர்களின் பழக்கமும் இரணியனை பொதுவுடைமைவாதியாக மாற்றுகிறது. பிறகு, மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக "இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்த பல போராளிகளை உருவாக்கினார். பின்னாட்களில், இங்கே ஊர் திரும்பிய பின் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணான டெல்டா மாவட்டங்களில் சுதந்திரத்திற்கு பின்னாலும் வேறூருன்றிருந்த ஆண்டான் அடிமை ஆதிக்க போக்கை அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுக்க பெரும்பங்காற்றினார்.

ஆளும் வர்க்கத்தின் இடையூறுகளையெல்லாம் கடந்து
சிங்கப்பூரிலிருந்து தாயகம் வந்த இரணியன், பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். பிறகு இங்குள்ள உழவர்களின், தொழிலாளர்களின் அவலநிலையை கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கான போராட்ட வழிமுறைகளை உருவாக்கி களப்போராளியாக வெகுண்டெழுந்தார். டெல்டா பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை அடிமை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி பட்டியல் சாதி மக்களை காத்ததாலும், விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டதன் விளைவாலும், வாட்டாக்குடி இரணியனுக்கு எதிராக சுயசாதியை சேர்ந்த பண்ணையார்களே எதிராகி போனார்கள்.

தலைமறைவாக இருந்த போது எதிர்பாராத விதமாக வடசேரி சவுக்கு தோப்பில் பட்டாமணியம் சம்பந்தமூர்த்தி என்பவரால், 05.05.1950 அன்று காட்டிக்கொடுக்கப்படுகிறார். அரச கைக்கூலிகளின் துப்பாக்கி குண்டுகள் இரணியனின் மார்பில் பாய்கிறது; "புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!" என முழக்கமிட்டு தாய் மண்ணில் 30 வயதே நிரம்பிய மாவீரன் வாட்டக்குடி இரணியன் விழுந்தார் விதையாய்! அவரது விருட்சமாய் நாங்கள் இன்னும் அவர் விட்டுச்சென்ற வீரத்தையும், கொள்கையையும் தூக்கி பிடிக்கிறோம் இரணியனியனின் வழித்தோன்றலாய்!

வாட்டக்குடி இரணியனோடு இணைந்து செயல்பட்ட ஜாம்பனோடை சிவராமனையும் ஆளும் வர்க்கம் உயிரோடு வைக்கவில்லை. அவரும் அரசாங்க துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார் என்பதே புரட்சி கலந்த சோக வரலாறு. ஆதிக்கசாதி என அடையாளப்பட்டும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, தன் சொந்தசாதி பண்ணையார்களையே எதிர்த்து களம்கண்ட அகமுடையார் இனக்குழுவை சார்ந்த வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி, மணலி கந்தசாமி போன்ற பொதுவுடைமைவாதிகளை மறந்த சமூகம் தான், தன் மொழி, பண்பாடு, கலச்சாரம் பற்றியே தெரியாத வேற்று நாட்டு சே'குவேராவை தலையில் தூக்கி வைத்து, சட்டையில் படம் போட்டு கொண்டாடுகிறது! சே'வை கொண்டாடுங்கள், அதே சமயம் தன் இனத்தானையும் மறக்காதீர்கள். ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியின் பெருமைமிகு அகமுடையார் இனக்குழுவின் அடையாளமாக திகழும் வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி (இவர் தான் 'கபாலி' படத்தின் நிஜ ஹீரோ), மணலி கந்தசாமி போன்ற கம்யூனிச மாவீரர்களையும் நினைவு கூர்வோம்.

தன் சாதிக்காக போராடும் நபர்களெல்லாம் இன்றைய நாளில் இனப்போராளியாக புகழப்படும் காலத்தில், தன் சாதிக்கோ, தனக்கோ எவ்வித பிரச்சனையும் இல்லாத போதும் கூட, தன் சாதிக்காரர்களையும், உறவினர்களையும் எதிர்த்து பட்டியல் சாதி மக்களுக்காக போராடிய இம்மாவீரர்களெல்லாம் சாதியால் (அகமுடையார்) ஆதிக்கவாதிகள்; ஆனால், செயலால் பொதுவுடைமை வாதிகள்! 

எம்குல மாவீரர்களுக்கு செவ்வணக்கம்!





இன்றைக்கு எத்தனையோ நூல்கள் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்ற அகமுடையார். அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது. இன்றைக்கு அகமுடையாரை தரம் தாழ்த்தி பதிவிடும் நபர்களும் இந்த பெருமாள் தேவரின் எழுத்துகளை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வாசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. இதன் மூலமாகவே எழுத்தில் யார் ஆளுமை செலுத்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

முத்துராமலிங்கத் தேவர் தன் சொத்துகளை பிரித்து பலருக்கும் கொடுத்த போது, அதை ஓர் அறக்கட்டளையாக்க வேண்டுமென மெனக்கெட்டு செயல்படுத்தி காட்டியவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர். அருப்புக்கோட்டையில் இராமுத்தேவரின் மகனாக அவதரித்த இவர், பதிமூன்றாம் வயதிலேயே அரசியலில் காலடி பதித்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1971, 1974ம் ஆண்டுகளில் அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடிய அரு.இரா. பெருமாள் தேவர், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேசியத்தலைவராகவும் இருந்தார் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விசயம்.

இப்படியான ஆளுமையைக் கொண்டு தேசியக்கட்சியில் பணியாற்றி, எழுத்தாளராகவும், அரசியல் வாதியாகவும், பொதுவுடைமை சித்தாந்தவாதியாகவும், கொள்கை பிடிப்போடு கடைசிவரை திகழ்ந்த ஏ.ஆர்.பெருமாள் தேவரின் 20ம் ஆண்டு நினைவேந்தல் (17.05.1921 - 21.04.1998) இன்று! 

பெருமைமிகு பெருந்தமிழருக்கு புகழ் வணக்கம்!

’அகமுடையார்’ பெரும்பான்மையாக உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இந்த 60 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகளை கொண்டுள்ள பெரும்சமூகமான அகமுடையாருக்கு இதுவரையில் எந்த அரசியல் கட்சியும் உரிய அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. இது தவிர இன்னும் 80 தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை அகமுடையார் சமூகம் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விசயம்.



1. திருவண்ணாமலை
2.ஆற்காடு
3.வேலூர்
4.திருப்பத்தூர்
5.சோளிங்கர்
6.போளூர்
7.கள்ளக்குறிச்சி (தனி)
8.ஆரணி
9.தஞ்சாவூர்
10.பட்டுக்கோட்டை
11.கும்பகோணம்
12.திருத்துறைப்பூண்டி (தனி)
13.வேதாரண்யம்
14.சிவகங்கை
15.மானாமதுரை (தனி)
16.மதுரை வடக்கு
17.மதுரை மேற்கு
18.திருமங்கலம்
19.சோழவந்தான் (தனி)
20.இராமநாதபுரம்
21.திருச்சுழி
22.சூலூர்
23.வேளச்சேரி
24.காட்பாடி
25.குடியாத்தம் (தனி)
26.செங்கம் (தனி)
27.கலசப்பாக்கம்
28.விழுப்புரம்
29.ரிஷிவந்தியம்
30.மன்னார்குடி
31.பேராவூரணி
32.திருவாரூர்
33.ஆத்தூர்
34.திருப்பத்தூர்-சிவகங்கை
35.திருப்பரங்குன்றம்
36.பெரியகுளம் (தனி)
37.போடிநாயக்கனூர்
38.திண்டுக்கல்
39.அறந்தாங்கி
40.முதுகுளத்தூர்
41.வேப்பனஹள்ளி
42.பெண்ணாகரம்
43.மேட்டூர்
44.திருப்பூர் வடக்கு
45.சிங்காநல்லூர்
46.பழநி
47.நெய்வேலி
48.திருவிடைமருதூர் (தனி)
49.பாபநாசம்
50.கந்தர்வகோட்டை (தனி)
51.காரைக்குடி
52.உசிலம்பட்டி
53.ஆண்டிபட்டி
54.கம்பம்
55.சிவகாசி
56.காஞ்சிபுரம்
57.பரமக்குடி (தனி)
58.திருவாடானை
59.வாசுதேவநல்லூர் (தனி)
60.வில்லிவாக்கம்




சென்னை பெரியபாளையத்தில் பிறந்து, வேதாரண்யத்தில் மணமுடித்து, தஞ்சாவூரில் குடியேறி, பல ஆன்மீக-கல்வி சேவைகளை செய்து கடைசியாக தன் விருப்பப்படியே திருவையாறில் தன்னுயிரை 40வது வயதிலேயே விண்ணுக்கு கொடுத்து இறைவனடி சேர்ந்த, ஆன்மீக செம்மலும், கல்வி வள்ளலுமாகிய அகமுடையார் குலத்தோன்றலான பச்சையப்ப முதலியாரின் 224வது நினைவுநாள் இன்று.

கோயில்களிலும், மடங்களிலும் நிரந்தர அண்ணதானம் வழங்கியதோடு மட்டுமில்லாமல், பல்வேறு கோவில்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார். இன்றளவும் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன. காஞ்சிபுரம், சென்னை, சிதம்பரத்தில் இலவச பள்ளிகளை துவங்கினார். தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார். இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகளும், 16 பள்ளிகளும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் இருக்கின்றன. தஞ்சை அரசருக்கே, ஒரு லட்சம் வராகன் கடன் தருமளவு உயர்ந்தார். தன்னுடைய சொத்து யாவையும் பொதுதர்மத்திற்கே உயில் எழுதி வைத்தார். இப்படியாக தன் வாழ்நாளில் ஆன்மீகத்திலும், கல்வியிலும் தன்னலம் பாராது சேவையாற்றிய இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த வள்ளலின் பெருமைகளை போற்றத்தவறிய சமூகம் இதுவென்பதால் நினைவூட்டுவது எம் கடமையாகிறது.



சென்னை பெரியபாளையத்தில் பிறந்து, வேதாரண்யத்தில் மணமுடித்து, தஞ்சாவூரில் குடியேறி, பல ஆன்மீக-கல்வி சேவைகளை செய்து கடைசியாக தன் விருப்பப்படியே திருவையாறில் தன்னுயிரை 40வது வயதிலேயே விண்ணுக்கு கொடுத்து இறைவனடி சேர்ந்த, ஆன்மீக செம்மலும், கல்வி வள்ளலுமாகிய அகமுடையார் குலத்தோன்றலான பச்சையப்பா முதலியார் அனைவருக்குமான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஏழ்மையான சூழலில் பிறந்த போதும், கொடை வள்ளலாய் இறந்து, இன்னமும் நம்மோடு நினைவில் வாழும் எம் அகமுடையார் குலத்தில் உதித்த மாபெரும் மனிதருக்கு புகழ் வணக்கம்!


மார்ச் - 13: மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மேதகு இராச.பாஸ்கர் ஐயாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்.


மார்ச் - 14: தனித்தமிழர் சேனையின் நிறுவனர் மேதகு க.நகைமுகன் ஐயாவின் இரண்டாமாண்டு நினைவேந்தல்.




மார்ச் - 15: லெனின் கம்யூனிஸ்ட் நிறுவனர் மேதகு கூத்தக்குடி ச.சண்முகம் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.



அகமுடையார் பேரினத்தின் போற்றுதலுக்குரிய அடையாளமாய் திகழ்ந்த தமிழுணர்வுமிக்க இம்மூன்று மாபெரும் தலைவர்களையும் ஒரே மாதத்தில் இழந்தோம் என்பது சோக வரலாறாகி போனாலும் கூட, தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக சமுதாய பணியாற்றிய இம்மூத்தோரின் வழித்தடத்திலேயே நாங்களும் பயணிக்கிறோம்.


வீர வணக்கம்!