சென்னை பெரியபாளையத்தில் பிறந்து, வேதாரண்யத்தில் மணமுடித்து, தஞ்சாவூரில் குடியேறி, பல ஆன்மீக-கல்வி சேவைகளை செய்து கடைசியாக தன் விருப்பப்படியே திருவையாறில் தன்னுயிரை 40வது வயதிலேயே விண்ணுக்கு கொடுத்து இறைவனடி சேர்ந்த, ஆன்மீக செம்மலும், கல்வி வள்ளலுமாகிய அகமுடையார் குலத்தோன்றலான பச்சையப்ப முதலியாரின் 224வது நினைவுநாள் இன்று.

கோயில்களிலும், மடங்களிலும் நிரந்தர அண்ணதானம் வழங்கியதோடு மட்டுமில்லாமல், பல்வேறு கோவில்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார். இன்றளவும் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன. காஞ்சிபுரம், சென்னை, சிதம்பரத்தில் இலவச பள்ளிகளை துவங்கினார். தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார். இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகளும், 16 பள்ளிகளும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் இருக்கின்றன. தஞ்சை அரசருக்கே, ஒரு லட்சம் வராகன் கடன் தருமளவு உயர்ந்தார். தன்னுடைய சொத்து யாவையும் பொதுதர்மத்திற்கே உயில் எழுதி வைத்தார். இப்படியாக தன் வாழ்நாளில் ஆன்மீகத்திலும், கல்வியிலும் தன்னலம் பாராது சேவையாற்றிய இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த வள்ளலின் பெருமைகளை போற்றத்தவறிய சமூகம் இதுவென்பதால் நினைவூட்டுவது எம் கடமையாகிறது.



சென்னை பெரியபாளையத்தில் பிறந்து, வேதாரண்யத்தில் மணமுடித்து, தஞ்சாவூரில் குடியேறி, பல ஆன்மீக-கல்வி சேவைகளை செய்து கடைசியாக தன் விருப்பப்படியே திருவையாறில் தன்னுயிரை 40வது வயதிலேயே விண்ணுக்கு கொடுத்து இறைவனடி சேர்ந்த, ஆன்மீக செம்மலும், கல்வி வள்ளலுமாகிய அகமுடையார் குலத்தோன்றலான பச்சையப்பா முதலியார் அனைவருக்குமான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஏழ்மையான சூழலில் பிறந்த போதும், கொடை வள்ளலாய் இறந்து, இன்னமும் நம்மோடு நினைவில் வாழும் எம் அகமுடையார் குலத்தில் உதித்த மாபெரும் மனிதருக்கு புகழ் வணக்கம்!


மார்ச் - 13: மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மேதகு இராச.பாஸ்கர் ஐயாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்.


மார்ச் - 14: தனித்தமிழர் சேனையின் நிறுவனர் மேதகு க.நகைமுகன் ஐயாவின் இரண்டாமாண்டு நினைவேந்தல்.




மார்ச் - 15: லெனின் கம்யூனிஸ்ட் நிறுவனர் மேதகு கூத்தக்குடி ச.சண்முகம் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.



அகமுடையார் பேரினத்தின் போற்றுதலுக்குரிய அடையாளமாய் திகழ்ந்த தமிழுணர்வுமிக்க இம்மூன்று மாபெரும் தலைவர்களையும் ஒரே மாதத்தில் இழந்தோம் என்பது சோக வரலாறாகி போனாலும் கூட, தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக சமுதாய பணியாற்றிய இம்மூத்தோரின் வழித்தடத்திலேயே நாங்களும் பயணிக்கிறோம்.


வீர வணக்கம்!