'தமிழவேள்' வே.உமாமகேசுவரன் பிள்ளை! (07.05.1883 - 09.05.1941)


1883ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் "கருந்திட்டைக்குடி" எனும் கரந்தை கிராமத்தில், வேம்பப்பிள்ளை - காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

அன்றைய காலக்கட்டங்களிலேயே சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.

1911ம் ஆண்டு மே 14ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக வே.உமாமகேசுவரன் பிள்ளை பொறுப்பேற்றார்.

கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.

1915ம் ஆண்டில் "தமிழ்ப்பொழில்" என்னும் மாத இதழை தொடங்கி, தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார்.

1919ம் ஆண்டிலேயே தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஸ்ரீமான், ஸ்ரீமதி, விவாகம் என்ற வட சொற்களுக்குப் பதில் திருமகன், திருவாட்டி, செல்வன், செல்வி, திருமண விழா என்னும் சொற்களை முதன்முதலில் கையாண்டார்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற அருஞ்சொற்களைத் தமிழுக்குத் தந்தார்.

1922 ஆம் ஆண்டிலேயே தமிழுக்கென தனியே ”தமிழ்ப் பல்கலைக் கழகம்” வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச்செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றினார்.

நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் ”தமிழ்த் தாய் வாழ்த்து” பாடலாக தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தினார்.

1928 ல் கரந்தை தமிழ் சங்கத்தின் சார்பில் கட்டணம் இல்லா மருத்துவமனையை தொடங்கினார்.

1937ம் ஆண்டில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, அதனை எதிர்த்து முதல் குரல் கொடுத்தும், தீர்மானம் இயற்றியும் களத்தில் இறங்கிப் போராடினார்.

"வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான ”நீதிக்கட்சி” தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தார்.

இவர் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராய் இருந்த காலத்தில் தொடக்க பள்ளிகள் நாற்பதாய் இருந்தது எண்ணிக்கையை நூற்றி எழுபதாக உயர்ந்தது தஞ்சையில் பல தீவு கிராமங்களை இணைக்க இவர் கட்டிய பாலங்கள் இன்றுவரை பயன் பாட்டில் உள்ளன.

அனைத்து தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்த தொண்டை போலவே, முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து பல சலுகைகளை இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பெற காரணமாய் இருந்த எங்கள் முன்னோடி 'தமிழவேள்' வே.உமாமகேசுவர பிள்ளைக்கு எம் புகழ் வணக்கம்!


யார் கள்ளர்? யார் மறவர்? என்ற பாடங்களையெல்லாம் நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அது எங்கள் வேலையுமில்லை. அகமுடையாருக்கான வரலாற்றை மீட்டெடுப்பது; அதை ஆவணப்படுத்துவது; மக்கள் தொகை அடிப்படையிலான அகமுடையாருக்கான பிரதிநிதித்துவ அரசியலை உருவாக்குவது. தேவர், சேர்வை, முதலியார், பிள்ளை, உடையார், நாயகர் போன்ற பல்வேறு பட்டங்களால் சிதறிக்கிடக்கும் அகமுடையார்களை ஒருங்கிணைப்பது; இப்படியாக எங்களுக்கான பாதையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.

ஆனால், தலா மூன்று மாவட்டங்களில் வாழும் கள்ளரும், மறவரும் தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழும் அகமுடையார்கள் யாரென்று இணையமெங்கும் பாடமெடுத்து கொண்டிருக்கின்றனர். உங்கள் அடையாளத்தோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள். இந்த பட்டமுள்ளவர்களே அகமுடையாரென்றும், இந்த பகுதியிலுள்ளவர்களே அகமுடையாரென்றும் புலம்பிக்கொண்டிருக்காமல், உங்களுக்கான அடையாளத்தை வெளியுலகுக்கு தயக்கமில்லாமல் சொல்லப் பழகுங்கள். எல்லா இடங்களிலும் அகமுடையார்களை இணைத்துக்கொண்டு முக்குலத்தோர் என்று போலியாக கட்டமைக்காதீர்கள்.

ஒட்டுமொத்த கள்ளர், மறவரின் எண்ணிக்கையை சேர்த்தாலும் அகமுடையார்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல. அது தனித்த பேரினக்குழு. அந்த பேரினக்குழுக்குள், ராஜகுலம், ராஜவாசல், ராஜபோஜ, கோட்டைப்பற்று, இரும்புத்தலை, கீழ்மன்று, மேல்மன்று, ஐவளிநாடு, பதினோறுநாடு, பில்லூர்நாடு, நாட்டுமங்கலம், புண்ணியரசுநாடு, கலியன், சானி, தொழுவ என பல உட்பிரிவுகள் உண்டு. அகமுடையார் எப்போதுமே தனித்து இயங்கக்கூடிய ஆண்வழி சமூகம். எங்களை மற்ற சாதிகள் நட்பு அடிப்படையில் பார்க்கலாமே ஒழிய, உறவு அடிப்படையில் பார்க்க கூடாது. அகமுடையார்களான நாங்கள், மாவலி வேந்தன் வழி வந்த வாணர் குலம். அகம்படவன், அகம்படி என்றும் எங்களுக்கு தனித்த பல அடையாளங்கள் உண்டு. எனவே, எங்களை மற்ற சாதியினர் உரிமை கோரும் கீழ்த்தரமான போக்கை கைவிடுங்கள்.


வாண ஆதி அரச அகமுடையார் உறவுகளே,

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் தொகுதியிலும் அகமுடையார்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரே அளவிலான பெரும்பான்மையாகவே இருக்கின்றது. இரு தொகுதிகளிலும் வெற்றித்தோல்விகளை நிர்ணயிக்கும் சக்திகளாக அகமுடையாரே இருக்கின்றனர்.

லெட்டர் பேடு அமைப்புகளை சேர்ந்த யாரோ நான்கைந்து பேர் நாங்கள் தான் ஒட்டுமொத்த அகமுடையார் அரசியலின் அடையாளமெனச் சொல்லி தினகரனின் கள்ளர் மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை எந்த அகமுடையாரும் ஏற்க போவதில்லை.

அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸின் மோதிமுகவும், தினகரனின் கமமுகவும் கள்ளரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது. நாம் தமிழர் மற்றும் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அகமுடையாரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அகமுடையார் அமைப்பு என சொல்லிக்கொள்ளும் எந்த தலைவனும் கமமுகவையோ. மோதிமுகவையோ ஆதரிக்கவே மாட்டான். மாறாக இனத்திற்கு துரோகம் செய்பவனை தனக்கான தலைவனாக யாரும் கொண்டாடுவதில்லை. ஒருவேளை அப்படிப்பட்ட துரோகிகளை கொண்டாடும் ஒவ்வொரு அகமுடையானின் பிறப்பும் சந்தேகத்துக்குரியதே.

சூலூர் தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்க கூடிய சாதி அகமுடையார்களே. ஆனால், இல்லாத சாதியான முக்குலத்தோர் தான் சூலூரில் வாழ்கின்றனரென வரலாற்று திருடர்கள் இணையத்தில் வாந்தியெடுத்து கொண்டிருக்கின்றனர்.

முக்குலத்தோர் என்றோ, தேவர் என்றோ எந்த சாதியும் இங்கில்லை என்பதே அரசு ஆவணங்கள் படியான உண்மை. தேவர் என்பது அகமுடையாருக்கான பட்டங்களில் ஒன்று. தேவர் என்ற பட்டம் டெல்டாவில் அகமுடையாரை குறிப்பது போலவே, கொங்குவிலும் அகமுடையார்களையே குறிக்கிறது. கொங்கு பகுதியில் வாக்கு வங்கியே இல்லாதவர்கள், முக்குலத்தோர் என்ற முகமூடியோடு, அகமுடையார் முதுகில் அரசியல் சவாரி செய்ய நினைக்கின்றனர். இனி அந்த பித்தலாட்டமெல்லாம் தமிழக அரசியலில் எடுபடாது.


வாண ஆதி அரச மரபிரான அகமுடையார் உறவுகளே!

மதுரை மாவட்டத்தில் ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரும்பான்மை சமூகம் அகமுடையார் தான். ஆனால் அங்கே ஓர் அகமுடையாருக்கு கூட அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து சட்டமன்றத்தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான் உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அகமுடையாரே பெரும்பான்மை சமூகம். ஆனால், முக்குலத்தோர் என்ற போலியான அரசியலால், கள்ளர்களே மதுரை மாவட்டதில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பான சிறிய அரசியல் கணக்கீடுகளை கீழே பார்ப்போம்.

மதுரை மாவட்ட சட்டமன்றத்தொகுதிகள்:

மதுரை கிழக்கு - மூர்த்தி (அம்பல கள்ளர்)

மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ (பிறமலை கள்ளர்)

மதுரை வடக்கு - இராஜன் செல்லப்பா (பிறமலை கள்ளர்)

திருப்பரங்குன்றம் - லேட். ஏ.கே.போஸ் (பிறமலை கள்ளர்)

திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார் (மறவர்)

சோழவந்தான்(தனி) - கே.மாணிக்கம் (பள்ளர்)

மதுரை மத்தி - பி.டி.ஆர். பா.தியாகராஜன் (தொண்டை மண்டல வேளாளர்)

மதுரை தெற்கு - சரவணன் (செளராஷ்ட்ரா)

மேலூர் - பெரிய புள்ளான் (முத்தரையர்)

உசிலம்பட்டி - நீதிபதி (பிறமலை கள்ளர்)

இது தவிர, 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மதுரையில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்:

அதிமுக - வி.வி.ஆர்.இராஜ் சத்யன் - பிறமலை கள்ளர்

அமமுக - டேவிட் அண்ணாதுரை (மறவர்)

கம்யூனிஸ்ட் - சு.வெங்கடேசன் (நாயுடு)

இதுதான் மதுரை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை. மதுரை மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகமான அகமுடையாருக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியோ, நாடாளுமன்றத் தொகுதியோ கூட ஒதுக்கப்படவில்லை. ஏ.கே.போஸ் மறைவுக்கு பிறகு காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கூட அஇஅதிமுக, அமமுக சார்பில் பிறமலை கள்ளர் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக சார்பில் மட்டுமே பெரும்பான்மை சமூகமான அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த மருத்துவர் சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார்.

முக்குலத்தோர் என்ற போலியான இந்த உள்ளரசியலை புரிந்து கொள்ளாததால் தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. இது மதுரைக்கு மட்டுமில்லை; ஒட்டுமொத்த தமிழ்நாடெங்கும் அரசியலில் அகமுடையாருக்கு இதே நிலைமை தான். இனியாவது புரிதல் கொண்டு, எழுச்சியோடு அகமுடையார் பேரினம் அரசியலில் மீண்டெழட்டும். அதற்கான காலம் இப்போது தான் கனிந்திருக்கிறது; அகமுடையார் இளையோர்களே, இனியாவது நாம் இதை சரியாக பயன்படுத்திக் கொள்வோம். நமக்கென அரசியல் பாதையை வலுவாக உருவாக்குவோம்.



அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா'வில், மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு முழுபக்க புகழஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி. இதுபோலவே, அவர்களை தெய்வமாக வணங்கும் அகமுடையார்களுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் அரசாங்க அமைப்புகளில் பதவிகளையும், தேர்தல் காலங்களில் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அகமுடையார் வேட்பாளர்களையும் அறிவியுங்கள். அது போதும். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, அகமுடையார்களை புகழ்ச்சிக்கே அடிமையாக்குவீர்கள்?



வாணஆதிஅரசர்களான அகமுடையார் உறவுகளே!

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் சேர்வை பட்டம் என்பதால், அவரை அகமுடையார் என்றே நினைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போலவே இன்றைய முதல்வர்களும் நினைத்துவிட போகின்றனர். நத்தம் விஸ்வநாதன், வல்லம்பர் சாதியை சேர்ந்தவர்; ஆனால், பட்டம் சேர்வை. இந்த பட்டத்தை மட்டும் வைத்து அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் தொகுதியான திருப்பரங்குன்றத்தில் இவரை வேட்பாளாராக களமிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, பட்டத்திற்கும், சாதிக்கும் வித்தியாசம் தெரியாமல் நத்தம் விஸ்வநாதனுக்கு வாக்களியுங்களென களப்பணி செய்ய முன்வந்து விடாதீர்கள்.




நாடாளுமன்றத் தேர்தல்:

இராமநாதபுரம்:
பொன்.கரு.ரஜினிகாந்த் அகமுடையார் (அ.இ.த.அ.ம.க) - இரட்டை மின்கம்பம்
ஜெயபாண்டியன் (சுயேட்சை) - டிராக்டர்

விருதுநகர்:
மு.தங்கப்பாண்டியன் (சுயேட்சை) - தலைக்கவசம்

தஞ்சாவூர்:
என்.ஆர்.நடராஜன் (த.மா.கா) - ஆட்டோ

வேலூர்:
ஏ.சி.சண்முகம் (பு.நீ.க) - இரட்டை இலை

சிவகங்கை:
வே.சக்திப்பிரியா (நா.த.க) - விவசாயி

மதுரை:
எம்.அழகர் (ம.நீ.ம) - டார்ச் லைட்

திருவண்ணாமலை:
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) - இரட்டை இலை
சி.என்.அண்ணாதுரை (திமுக) - உதயசூரியன்
ஆர்.அருள் (ம.நீ.ம) - டார்ச் லைட்

கள்ளகுறிச்சி:
பொன்.கௌதம் சிகாமணி (திமுக) - உதயசூரியன்

திருப்பெரும்புதூர்:
டி.ஆர்.பாலு (திமுக) - உதயசூரியன்
தாம்பரம் நாராயணன் (அமமுக) - பரிசுப்பெட்டகம்

சட்டமன்ற இடைத்தேர்தல்:

தஞ்சாவூர்:
மோகன் கார்த்தி (நா.த.க) - விவசாயி

திருவாரூர்:
அருண் சிதம்பரம் (ம.நீ.ம) - டார்ச் லைட்

சோளிங்கர்:
அசோகன் (தி.மு.க) - உதயசூரியன்

பாப்பிரெட்டிப்பட்டி:
சதீஷ் (நா.த.க) - விவசாயி

திருப்போரூர்:
பெ.மணிகண்டன் (சுயேட்சை) - சாவி


(பி.கு: மேலும் சிலரது பெயர்கள் இணைக்கப்படக்கூடும்)

அன்புடன்
அழைக்கிறோம்
ஆலோசனை வழங்கிட.......

பாண்டிய மண்டல அகமுடையார் சங்கங்களின் கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம்,

வருகிற மார்சு 02-03-2019, சனிக்கிழமை,
மதுரையில் நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக பாண்டிய மண்டலத்தில் செயல்படும் அகமுடையார் சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அகமுடையார் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.




தமிழகத்தில் வாழ்கின்ற அகமுடையார் மக்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் தம் சந்ததியரின் ஒளிமயமான எதிர் கால வாழ்விற்காகவும், அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் நம் குல முன்னோடிகள், அமைப்பு நிர்வாகிகள், இனமான இளைய தலைமுறையினர் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

தமிழகத்திலும், அகில இந்தியாவிலும் நடக்க போகின்ற, நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் அரசியல் கட்சிகள் பழைய பகைமையை மறந்து, கட்சி தலைமையை வைத்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, கூட்டணிகள் உருவாக்கி, தேர்தல் வியூகம் அமைத்து கொண்டன என்றும், தேர்தல் நேரத்தில் சமுதாய சாதி சங்கங்களுடன் அக்கட்சிகள் எந்த வகையில் நேசக்கரம் நீட்டின என்றும், தேர்தலுக்கு பின்னர் அக்கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் அறிந்தகருப்பீர்கள்.

எனவே இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் 80 இலட்சம் அகமுடையார் மக்கள் வாழ்கின்ற நிலையில் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக, மாநில அரசிலும், மத்திய அரசிலும் நாம் உரிமைக்குரல் கொடுத்தால் நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை யாரும் தடுத்திட முடியாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதில், செயல் வடிவம் கொடுப்பதில், எங்கோ இடர்பாடு இருக்கிறது,

நம் அகமுடையார் அமைப்புகளுக்கு வேகம் இருக்கிறது, உணர்வு இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, தியாகம் இருக்கிறது, சேவை மனப்பான்மை இருக்கிறது, ஆனால் வேகம், விவேகம், துணிச்சல், இராசதந்திரம் ஆகியவைகள் ஒருங்கிணைக்கப்படாமல் சிதறிக்கிடக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அந்த உணர்வை உங்களிடையே அலசி ஆராய்ந்து அனைத்து அகமுடையார் சங்கங்களையும் ஒரு கூட்டமைப்புக்குள் (united front) கொண்டு வரமுடியும் என்று, நம் அகக்குலத்தின் சமுதாய முன்னோடிகள் பலர் அளித்த ஆக்கபூர்வமான அடிப்படையில் நாம் செயல்பட நம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக நீங்களெல்லாம் உழைக்க முன் வாருங்கள் என்று அழைப்பதற்காகவே தங்களை இம்மடலின் மூலம் தொடர்பு கொள்கிறோம்.

சிலரின் மனதில்! எங்கே இந்தக் காரியம் முடியப்போகிறது? எத்தனையோ முறை எவர் எவரோ முயன்றார்கள்! முடியவில்லை என்ற சலிப்புணர்வு உங்கள் எண்ணத்தில் நிழலாடுவதை எம்மால் உணர முடிகிறது. "Anything under the sun is possible on this earth" பகலவனுக்கின் கீழ் நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம், இந்த இலட்சியத்தை மனதில் வைத்து இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் சில முன் உதாரணங்களை நம்முடைய முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக எண்ணிக்கொண்டு கடைசி சந்தர்ப்பம் தாருங்கள், சிந்தித்து செயல்பட வாய்ப்பு உருவாக்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்கிறோம்.

நம்முடைய அகமுடையார் மக்களின் நிர்வாகத் திறமைக்கும், அறிவாற்றலுக்கும், நம்பிக்கைக்கும், செயல் திறனுக்கும் கொஞ்சம் கூட நிகரில்லாதவர்களெல்லாம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மாநில அளவிலும், மத்திய அரசிலும் எந்த அளவு அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் நாம் " செய் அல்லது செத்துமடி" என்ற உணர்வு படைத்த அடித்தள நம் குல மக்களுக்கு சரியான வழிகாட்டியாக செயல்படவில்லையே என்பதுதான் இன்றைய உண்மையான நிலை.

இதற்கான செயல்வடிவம் கொடுக்க, நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுக்க எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்து, இதற்கு முன்னுரிமை அளித்து, நல்ல ஆலோசனை வழங்க வருகை தாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம். வேற்றுமையை களைந்து தங்களின் தனித்தன்மை மாறாது, ஒற்றுமையாக அகமுடையார் சமூக முன்னேற்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

ஒன்றுபட்டு வெற்றிபெற வாரீர்! வாரீர்!!


நாள்: 02-03-2019 சனிக்கிழமை,
நேரம்: காலை 10-00 மணி,
இடம்: இராமசுப்பு அரங்கம்,
( PTR ஹோட்டல் அருகில்)
‎மாட்டுத்தாவணி பேருந்து
‎நிலையம் எதிரில்,
மதுரை.

தொடர்புக்கு: 63822 66931, 94429 38890, 97868 36503, 99658 79658,

தமிழ்கூறு நல்லுலகில் நீண்ட நெடிய வரலாற்று தொன்மைகளை தன்னுள் அடக்கியுள்ள முதுகுடி சமூகமான "அகமுடையார்" பேரினம். தனக்கான வரலாற்றை பொது வெளியில் பதிய வைக்கும் வரலாற்று கடமையை இதுகாலம் வரை செய்ய தவறிவிட்டது. அகமுடையார் வரலாற்றை முறையாக நாம் தொகுக்காத காரணத்தால், சில மாற்று தமிழ் சகோதர சாதிகள் தங்களின் வரலாற்றை படைக்கும்போது, பிற சமூகங்களின் வரலாற்றை தனது வரலாறாக உரிமை பாராட்டி திரிபு வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வரலாற்று திரிபு வேலையில் நமது வரலாற்று அடையாளமான சரித்திரநாயகனை நீண்டகாலமாக இரு சாதிகள் உரிமை பாராட்டி வருகின்றனர்.

அந்த சரித்திர நாயகன் யாரென்றால் மாலிய(வைணவ) சமயத்தின் ஆழ்வார்களில் ஒருவரான அகமுடையார் குல தோன்றல் "திருமங்கை ஆழ்வார்" மன்னர் ஆவார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஆய்விற்காக வாங்கிய நூல்களில் ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் அவர்கள் எழுதிய ’தமிழக வேளீர் வரலாறும் ஆய்வும்’ என்ற நூலில் 152 வது பக்கத்தில் "திருமங்கை மன்னர் என்ற அகம்படியச் சிற்றரசர்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நூல் எனக்கு திருமங்கை ஆழ்வார் அவர்களை பற்றிய தேடலை நோக்கி தூண்டியது.






சமீபத்தில் அகமுடையார் வரலாற்று ஆவண தேடலுக்காக சென்னையில் உள்ள பல்வேறு நூலகங்களில் அகமுடையார் வரலாற்றுக்கு தேவையான ஆவணங்களை தேடி அலைந்தபோது, மறைமலைஅடிகள் நூலகத்தில் ஒரு நூல் கிட்டியது. அந்த நூல் மாலிய(வைணவம்) சமயத் தொண்டர்களான ஆழ்வார்களின் வரலாற்றை உரைக்கும் நூலாகும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1971 ஆம் ஆண்டு வெளியிட்ட, ஊற்றத்தூர் விசய இராகவன் அவர்கள் எழுதிய "குருப்பரம்பரைப் புராணம், தொகுதி-2 நூலில், "திருமங்கையாழ்வார் திருவவதார என்ற அத்தியாயத்தில்,  திருமங்கை மன்னர் ’அகம்படியர் குலம்’ என்று பதியப்பட்டுள்ளது.

திருமங்கையாழ்வார் திருவவதார அத்தியாயம்:

பேதைநெஞ்சை! யின்றைப் பெருமை
யறிந்திலையே!
யேது பெருமையின்றைப் கென்னெனின்
-வோதுகின்றேன்
வாய்த்தபுகழ் மங்கையர்கோன்
மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்.
(உபதேச ரத்தினமாலை,பக்கம்;8)

"அகம்படியர் குலம்"

நிறையு மாமதி முகத்திய ரிளநகை
நிலவான்
நறைகொ ளாம்பலின் நாண்மலர்
நனைமுருக் கவிழும்
நிறையு நீர்மலித் தடங்களும் வயல்களும்
நிரம்பும்
குறைய லூரதன் பெருமையைக் கூறுத
லரிதால். 1

அந்த மாநக ரந்தினிற் சிவனடி யவரில்
வந்து வாழகம் படியர்தம் குடிவளம்
பெறவே
செந்தி ருப்பதி யானநா ரணன்திரு
வடியைச்
சிந்தை கொண்டுல கோர்தொழச்
செயும்பர காலன். 2


2,3,4,5,6, குளகம். அகம்படியர் குலத்தில், நல்லறிவு அணுகிடவும், மாயை புவியை விட்டு ஓடவும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சதிரத்தில் ஒன்பது கோள்களும் உச்சத்தில் விளங்க, ஞானத்தின் கொழுந்து எழுந்தது போல் நாரணன் பெருமையை உணராதவர்களைப் பிளக்கும் கோடாரிபோல், பரகாலர் தோன்றினார். (பரகாலர் - திருமங்கையாழ்வார்.)

இந்த ஆதாரங்கள் மூலமாகவும் திருமங்கையாழ்வார் அவர்கள், "அகமுடையார் குலத்தில் அவதரித்தவர் என்பது விளங்கும். இதற்கு பிறகும் மாற்று சாதியினர் திருமங்கையாழ்வரை உரிமை பாராட்டுவது அவர்களின் வரலாற்றுக்கு அழகல்ல. அகமுடையார் உறவுகள் மற்றும் அமைப்புகள் தங்களின் பதிவுகளிலும், தாங்கள் அடிக்கும் விளம்பர பதாகைகளிலும், சுவரோட்டிகளிலும் அகமுடையார் குலத்தோன்றல் மன்னர் திருமங்கையாழ்வார் திருவுருவ படத்தினை பயன்படுத்தி அகமுடையார் வரலாற்றை மீட்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி: சோ.பாலமுருகன் அகமுடையார், பழனி


"நாங்கள் யார் என்பதை,எங்களது செயல்கள் வெளிப்படுத்தும்" - சுபா.முத்துகுமார்.

எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும், தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். தந்தையின் தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வளர்கிறார். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம் ஒரு காலத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பொங்கி வழியும் பூமியாக இருந்தது. அதனால் ஈர்க்கபெற்று, சக மாணவர்கள் திரைப்பட, சாதி தலைவர்களின் ரசிகர்களாக அடையாளம் எடுத்தபோது அண்ணன் சுபா.முத்துக்குமார் மணிக்கணக்கில் கார்ல் மார்க்சையும், சோவியத் யூனியனையும், மாவோவையும், சே’வையும் பற்றி பேசுவார் என்று விவரிக்கிறார்கள் அவரை சிறுவயதில் அறிந்த தோழர்கள்.

பின்னர் சிறிதுசிறிதாக ஜெயவர்தனே மற்றும் அதுலத் முதலி காலங்களில் ஈழத்திலே பற்றி எரிந்த தீ மெதுவாக சுபா.முத்துகுமாரையும் பற்றிக் கொள்கிறது. பழனியில் பள்ளிபருவத்திலேயே பல்வேறு அறப்போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார். ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ, தமிழக விடுதலையும் அத்துனை அவசியம் என்ற புரிதலுக்கு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தோழர் தமிழரசன் வழியில் ஆயுத போராட்டத்திற்கு வித்திடுகிறார். குட்டிமணி, தங்கத்துரைகளின் படுகொலைகள், ஈகி திலீபனின் தியாகம் போன்றவை முத்துகுமாரையும் ஈழத்திற்கு நேரிடையாக அழைக்கிறது.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத பயிற்சிக்காக தமிழீழம் சென்றார். அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலோடு சிங்கள படைகளுக்கு எதிராக விடுதலை புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கு பெறுகிறார். தொடர்ச்சியாக தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யபெற்று பணியாற்றுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ் தேசிய மீட்சிப்படையை தலைமையேற்று வழிநடத்துகிறார். அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக புலிகளுக்கு தேவையான அனைத்தையும் தொடர்ச்சியாக வேதாரணியம் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளிலிருந்து அனுப்பி வருகிறார். தலைவர் பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ரோமியோ மற்றும் நான்கு பெண்போராளிகள் உட்பட பதினாறு போராளிகளை வேலூர் சிறையில் இருந்து தப்ப வைக்கும் பொறுப்பு சுபா.முத்துகுமாரிடம் வழங்கபடுகிறது. இப்போது அறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹாலிவுட் திரில்லர் படங்களில் வரும் காட்சிகளைப்போல உலகே வியக்கும் வண்ணம் புலிகள் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள். அவர்கள் உட்பட 43 போராளிகளை மிகக்கடுமையான மத்திய காவல் மற்றும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்கு நடுவே கல்யாண வீட்டார் ‘கெட்டப்’போடு தமிழகத்தில் இருந்து தப்ப வைத்து விடுகிறார் முத்துக்குமார். அண்ணனின் சாதுர்யமும், சாமார்த்தியமும் பல போராளிகளையும், புலித்தலைமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பின் ஒருமுறை மணமேல்குடியில் விடுதலை புலிகளுக்கு அனுப்ப பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கபெற்றார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலை ஆகி தலைமறைவாகிறார்.

போராட்டம் சந்தனக்காட்டில் புதிய பரிமாணம் எடுக்கிறது. வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் சேர்ந்து தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிச்சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் கடத்தல் திட்டத்தை சிறையிலிருந்தே வகுக்கிறார். அந்த கடத்தல் வீரப்பனார் ஒப்புதலோடு தோழர்களால் செவ்வனே முடிக்கபெருகிறது. தமிழர்களின் சீவாதார பிரச்சினைகளான காவிரிநீர், பெங்களூரில் பல ஆண்டுகளாக திறக்கபடாது மூடி கிடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு, மலைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மற்றும் போராளி முத்துக்குமார் விடுதலை போன்ற கோரிக்கைகள் முன்வைக்கபடுகிறது. அதனால் பிறகு சிறையிலிருந்து பிணையில் வருகிறார்.

ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் சனநாயக அரசியலில் நெருக்கமாக ஈடுபடுத்திகொள்கிறார், பின் மீண்டும் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டுசென்றதாக அண்ணன் கொளத்தூர் மணியுடன் கூட்டு அதிரடிப்படையால் கைதாகி கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கன்னட சிறையில் அடைக்கபடுகிறார். நான்கரை ஆண்டுகாலம் சிறைவாழ்க்கை, பின் மீண்டும் பிணையில் வருகிறார்.

மெல்ல மெல்ல ஈழத்தில் போர் உச்சத்தை எட்டுகிறது. தமிழ் தேசிய சனநாயக அரசியலில் தீவிரமாகிறார். தொடர்ந்து இயன்ற வழிகளில் எல்லாம் புலிகளுக்கு தேவையானவற்றை அனுப்புகிறார். ஈழம் மெல்ல மெல்ல அழிகிறது. ராமேஸ்வரம் பிரச்சினையில் மதுரையில் பிணை இடுவதற்காக தங்கி இருந்த சீமானை சந்தித்து தனி தீவிர போர்க்குண அரசியல் பாதையை ஊக்குவிக்கிறார். தோழர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் அந்த பகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தோற்கடிக்க களப்பணியாற்றினார் (ஆனால் அதன் பின் தேர்தலில் சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது)

மதுரையில் "முள்வேலி தகர்த்தெறிவோம்" மாநாட்டை தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்சி பணிகளை தொடங்கி முழுமூச்சுடன் ஈடுபடும் வேளையில் புதுக்கோட்டை பெ.தி.க மாவட்ட பொறுப்பாளர் கரு. காளிமுத்து அவர்களின் புதல்வி மாதரசியை சாதி மறுப்பு மணம் முடிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் கொடி அறிமுகம் தஞ்சையில் முடித்து திரும்பும் வழியில் ஈழத்திற்கு மருந்துகள், ரத்த பைகள் அனுப்பியதாக கருணாநிதி அரசால் ஜாபர் சேட்டால் கைது செய்யபடுகிறார்.

ஒன்றரை மாதம் கழித்து வழக்கை உடைத்து வெளிவந்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பம்பரமாய் சுழன்ற அவர், அந்த பகுதிகளில் பல புலிக்குட்டிகளை வளர்த்தெடுக்கிறார். இவருடைய காலம் இதுவரையான நாம் தமிழர் வரலாற்றில் புதுக்கோட்டை, காரைக்குடி, தென் தஞ்சை மாவட்டங்களின் பொற்காலம் எனலாம். இந்த மூன்று மாவட்டங்களிலுமே அப்போதைய கருணாவின் ஆளுங்கட்சிக்கு இணையான செயல்பாடுகளை நாம் தமிழர் கொண்டிருந்தது என்பது ஆளுங்கட்சியினரே ஏற்றுக்கொண்ட வாதம். ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வளர்த்தெடுத்தார்.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக இந்த தமிழினத்தின் அறிவிக்கபடாத தளபதி மர்ம நபர்களால் புதுகை நகரின் மத்தியில், அண்ணா சிலை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடத்தில் பிப்ரவரி 16, 2011 அன்று கயவர்களால் வெட்டி வீழ்த்தபட்டார். இந்த பாதகத்தை செய்தது தனிப்பட்ட எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இது எதிரியும் அவனை சார்ந்த உற்றார் உறவினரும் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்பதை எளிதில் அவதானிக்க முடியும். ஆகவே, இது அரச பயங்கரவாதமா என்பது சிவகங்கை தொகுதியை உள்ளடக்கிய புதுகை மாவட்டத்தின் ‘சிதம்பர ரகசியம்’!

அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கு பெற்ற கொளத்தூர் மணி அவர்கள், என்னால் முத்துகுமார் பல நேரங்களிலும், அவனால் நான் பல நேரங்களிலும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம் என்றும் முத்துக்குமார் எனது சிறைத்தோழன் என்றும் சொன்னது அண்ணனை பற்றிய முத்தாய்ப்பாய் அமைகிறது.

அப்போது பேசிய அய்யா நெடுமாறன், முத்துகுமாரின் வீர தீரங்களை தாண்டி, எனக்கே சில நேரம் விளங்காத அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் வல்லவன் முத்துகுமார் என்றார்.

சீமான் பேசும்போது, நான் சமகாலத்தில் சந்தித்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவன் முத்துக்குமார், அவன் எனக்கு அரசியல் ஆசான் என்றார். முத்துகுமார் தூக்கிய ஆயுதத்தை விட அவன் சிந்தனை பேராபத்து என்று உணர்ந்தவர்கள் தான் அவனை சிதைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

தோழர் ஏகலைவன் கூறும்போது, அண்ணனோடு நெருங்கி பழகியதை வைத்து, போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, போராளிகளாகவே பிறக்கிறார்கள் என்பது உண்மையானால் இவன் அவ்வாறு பிறந்தவன் என்றார்.

சுருக்கமாக,

10 ஆண்டுகள் தமிழ் தேசிய விடுதலைக்காக சிறை வாழ்க்கை;

6 ஆண்டுகள் விடுதலைபுலிகளுக்கு உதவி செய்ததற்காக, தலைமறைவு வாழ்வு;

5 ஆண்டுகள் வீரப்பனாருடன் ஆயுதமேந்தி போராட்டம்;

5 ஆண்டுகள் மேதகு வே. பிரபாகரனுடன் தமிழீழ விடுதலை போராட்டம்;

4 ஆண்டுகள், நாம் தமிழர் இயக்கத்தை தோற்றுவித்து மக்கள் சனநாயக அரசியல் வாழ்க்கை.

சமகால தமிழ்த்தேசிய சூழலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த 'தமிழ் தேசிய போராளி' சுபா. முத்துகுமாருக்கு வீர வணக்கம்! 15.02.2019







சோழர் காலத்தில் இலங்கையின் வடக்கே ஐந்து பெரும் தளபதிகள் நிர்வாகத்தை நடாத்தினார்கள். ஒருவர் ஐயக்கதேவர் – வல்வை, பொலிகண்டி, தொண்டைமானாறு பகுதிக்கும், வீரமாணிக்கதேவர் மயிலிட்டி பகுதிக்கும், சமரபாகுதேவர் உடுப்பிட்டி, வல்வெட்டி பகுதிகளையும், வெள்ளிவண்டிதேவர் துன்னாலைப் பகுதியையும், மாயாண்டிபாகுதேவர் கற்கோவளம் குறிச்சியையும் பாதுகாக்க சோழப் பேரரசனால் அனுப்பப்பட்டனர்.

இந்த ஐவரில் ஐயக்கதேவர் வம்சத்தில் வந்தவரே வேலுப்பிள்ளையும் அவர் மகன் பிரபாகரனுமாகும். ஐயக்கதேவர் பின் கரியதேவர் – காராளர் – ஐயன் – வேலர் – ஐயம்பெருமாள் – வேலாயுதர் – திருமேனியர் – வெங்கடாசலம் – குழந்தைவேற்பிள்ளை – வேலுப்பிள்ளை – திருவேங்கடம் – வேலுப்பிள்ளை – பிரபாகரன் என்பதே இந்த வம்சத்தின் படிமுறையான வளர்ச்சியாகும்.

தமிழகத்தில் இருந்து வந்து சோழர் காலத்தில் வல்வையில் குடியேறிய போர்த் தளபதிகள் குடும்பமாக இவர்கள் இருந்தார்கள். இதனால் போர்க்குணம், விடுதலை போன்றன இவர்களின் இயல்பாக இருந்தது. வேலுப்பிள்ளை எல்லாளனுக்கு விளக்கு வைத்ததும், பிரபாகரன் பிறந்ததும் தற்செயலான நிகழ்வல்ல. தமிழ் ஈழ மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றின் தொடர்ச்சியே அது.

தஞ்சைப் பெருங்கோயில்களைக் கட்டிய சோழர்கள் போலவே சிவாலயங்களை கட்டுவதும் இவர்களுடைய குடும்ப இயல்பாக இருந்தது. திருமேனியர் வெங்கடாசலம் பிள்ளை அவர்களே வல்வை சிவன்கோயிலைக் கட்டினார். அவருடைய சகோதரர் குழந்தைவேற்பிள்ளை அவர்களே கொழும்பு செக்கடித் தெருவில் உள்ள கதிரேசன் கோயிலைக் கட்டினார். சோழர்கால வரலாற்றையும், பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் வரலாற்று நாவல்களையும் உன்னிப்பாகப் படித்தால் வேலுப்பிள்ளை குடும்பத்தின் வாழ்வியல் நெறியை எளிதாக விளங்க முடியும்.

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரனின் வம்சாவழி பட்டியல்:






நன்றி: ஈழ இணையதளங்கள்

(இந்த கட்டுரை தொடர்பான விரிவான பகுதிகளை படிக்க கீழே ஒருசில இணையதள லிங் கொடுக்கப்பட்டுள்ளது)


http://eelavarkural.blogspot.in/2010/01/blog-post_14.html?view=classic

http://www.vvtuk.com/archives/15520

https://varnakulattans.weebly.com/veluppillai-appah.html

http://valvainilam.blogspot.in/2013/01/3.html

https://velupillaiprabhakaran.wordpress.com/2010/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8/