அன்புடன்
அழைக்கிறோம்
ஆலோசனை வழங்கிட.......

பாண்டிய மண்டல அகமுடையார் சங்கங்களின் கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம்,

வருகிற மார்சு 02-03-2019, சனிக்கிழமை,
மதுரையில் நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக பாண்டிய மண்டலத்தில் செயல்படும் அகமுடையார் சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அகமுடையார் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.




தமிழகத்தில் வாழ்கின்ற அகமுடையார் மக்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் தம் சந்ததியரின் ஒளிமயமான எதிர் கால வாழ்விற்காகவும், அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் நம் குல முன்னோடிகள், அமைப்பு நிர்வாகிகள், இனமான இளைய தலைமுறையினர் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

தமிழகத்திலும், அகில இந்தியாவிலும் நடக்க போகின்ற, நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் அரசியல் கட்சிகள் பழைய பகைமையை மறந்து, கட்சி தலைமையை வைத்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, கூட்டணிகள் உருவாக்கி, தேர்தல் வியூகம் அமைத்து கொண்டன என்றும், தேர்தல் நேரத்தில் சமுதாய சாதி சங்கங்களுடன் அக்கட்சிகள் எந்த வகையில் நேசக்கரம் நீட்டின என்றும், தேர்தலுக்கு பின்னர் அக்கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் அறிந்தகருப்பீர்கள்.

எனவே இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் 80 இலட்சம் அகமுடையார் மக்கள் வாழ்கின்ற நிலையில் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக, மாநில அரசிலும், மத்திய அரசிலும் நாம் உரிமைக்குரல் கொடுத்தால் நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை யாரும் தடுத்திட முடியாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதில், செயல் வடிவம் கொடுப்பதில், எங்கோ இடர்பாடு இருக்கிறது,

நம் அகமுடையார் அமைப்புகளுக்கு வேகம் இருக்கிறது, உணர்வு இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, தியாகம் இருக்கிறது, சேவை மனப்பான்மை இருக்கிறது, ஆனால் வேகம், விவேகம், துணிச்சல், இராசதந்திரம் ஆகியவைகள் ஒருங்கிணைக்கப்படாமல் சிதறிக்கிடக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அந்த உணர்வை உங்களிடையே அலசி ஆராய்ந்து அனைத்து அகமுடையார் சங்கங்களையும் ஒரு கூட்டமைப்புக்குள் (united front) கொண்டு வரமுடியும் என்று, நம் அகக்குலத்தின் சமுதாய முன்னோடிகள் பலர் அளித்த ஆக்கபூர்வமான அடிப்படையில் நாம் செயல்பட நம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக நீங்களெல்லாம் உழைக்க முன் வாருங்கள் என்று அழைப்பதற்காகவே தங்களை இம்மடலின் மூலம் தொடர்பு கொள்கிறோம்.

சிலரின் மனதில்! எங்கே இந்தக் காரியம் முடியப்போகிறது? எத்தனையோ முறை எவர் எவரோ முயன்றார்கள்! முடியவில்லை என்ற சலிப்புணர்வு உங்கள் எண்ணத்தில் நிழலாடுவதை எம்மால் உணர முடிகிறது. "Anything under the sun is possible on this earth" பகலவனுக்கின் கீழ் நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம், இந்த இலட்சியத்தை மனதில் வைத்து இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் சில முன் உதாரணங்களை நம்முடைய முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக எண்ணிக்கொண்டு கடைசி சந்தர்ப்பம் தாருங்கள், சிந்தித்து செயல்பட வாய்ப்பு உருவாக்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்கிறோம்.

நம்முடைய அகமுடையார் மக்களின் நிர்வாகத் திறமைக்கும், அறிவாற்றலுக்கும், நம்பிக்கைக்கும், செயல் திறனுக்கும் கொஞ்சம் கூட நிகரில்லாதவர்களெல்லாம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மாநில அளவிலும், மத்திய அரசிலும் எந்த அளவு அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் நாம் " செய் அல்லது செத்துமடி" என்ற உணர்வு படைத்த அடித்தள நம் குல மக்களுக்கு சரியான வழிகாட்டியாக செயல்படவில்லையே என்பதுதான் இன்றைய உண்மையான நிலை.

இதற்கான செயல்வடிவம் கொடுக்க, நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுக்க எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்து, இதற்கு முன்னுரிமை அளித்து, நல்ல ஆலோசனை வழங்க வருகை தாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம். வேற்றுமையை களைந்து தங்களின் தனித்தன்மை மாறாது, ஒற்றுமையாக அகமுடையார் சமூக முன்னேற்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

ஒன்றுபட்டு வெற்றிபெற வாரீர்! வாரீர்!!


நாள்: 02-03-2019 சனிக்கிழமை,
நேரம்: காலை 10-00 மணி,
இடம்: இராமசுப்பு அரங்கம்,
( PTR ஹோட்டல் அருகில்)
‎மாட்டுத்தாவணி பேருந்து
‎நிலையம் எதிரில்,
மதுரை.

தொடர்புக்கு: 63822 66931, 94429 38890, 97868 36503, 99658 79658,

தமிழ்கூறு நல்லுலகில் நீண்ட நெடிய வரலாற்று தொன்மைகளை தன்னுள் அடக்கியுள்ள முதுகுடி சமூகமான "அகமுடையார்" பேரினம். தனக்கான வரலாற்றை பொது வெளியில் பதிய வைக்கும் வரலாற்று கடமையை இதுகாலம் வரை செய்ய தவறிவிட்டது. அகமுடையார் வரலாற்றை முறையாக நாம் தொகுக்காத காரணத்தால், சில மாற்று தமிழ் சகோதர சாதிகள் தங்களின் வரலாற்றை படைக்கும்போது, பிற சமூகங்களின் வரலாற்றை தனது வரலாறாக உரிமை பாராட்டி திரிபு வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வரலாற்று திரிபு வேலையில் நமது வரலாற்று அடையாளமான சரித்திரநாயகனை நீண்டகாலமாக இரு சாதிகள் உரிமை பாராட்டி வருகின்றனர்.

அந்த சரித்திர நாயகன் யாரென்றால் மாலிய(வைணவ) சமயத்தின் ஆழ்வார்களில் ஒருவரான அகமுடையார் குல தோன்றல் "திருமங்கை ஆழ்வார்" மன்னர் ஆவார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஆய்விற்காக வாங்கிய நூல்களில் ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் அவர்கள் எழுதிய ’தமிழக வேளீர் வரலாறும் ஆய்வும்’ என்ற நூலில் 152 வது பக்கத்தில் "திருமங்கை மன்னர் என்ற அகம்படியச் சிற்றரசர்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நூல் எனக்கு திருமங்கை ஆழ்வார் அவர்களை பற்றிய தேடலை நோக்கி தூண்டியது.






சமீபத்தில் அகமுடையார் வரலாற்று ஆவண தேடலுக்காக சென்னையில் உள்ள பல்வேறு நூலகங்களில் அகமுடையார் வரலாற்றுக்கு தேவையான ஆவணங்களை தேடி அலைந்தபோது, மறைமலைஅடிகள் நூலகத்தில் ஒரு நூல் கிட்டியது. அந்த நூல் மாலிய(வைணவம்) சமயத் தொண்டர்களான ஆழ்வார்களின் வரலாற்றை உரைக்கும் நூலாகும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1971 ஆம் ஆண்டு வெளியிட்ட, ஊற்றத்தூர் விசய இராகவன் அவர்கள் எழுதிய "குருப்பரம்பரைப் புராணம், தொகுதி-2 நூலில், "திருமங்கையாழ்வார் திருவவதார என்ற அத்தியாயத்தில்,  திருமங்கை மன்னர் ’அகம்படியர் குலம்’ என்று பதியப்பட்டுள்ளது.

திருமங்கையாழ்வார் திருவவதார அத்தியாயம்:

பேதைநெஞ்சை! யின்றைப் பெருமை
யறிந்திலையே!
யேது பெருமையின்றைப் கென்னெனின்
-வோதுகின்றேன்
வாய்த்தபுகழ் மங்கையர்கோன்
மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்.
(உபதேச ரத்தினமாலை,பக்கம்;8)

"அகம்படியர் குலம்"

நிறையு மாமதி முகத்திய ரிளநகை
நிலவான்
நறைகொ ளாம்பலின் நாண்மலர்
நனைமுருக் கவிழும்
நிறையு நீர்மலித் தடங்களும் வயல்களும்
நிரம்பும்
குறைய லூரதன் பெருமையைக் கூறுத
லரிதால். 1

அந்த மாநக ரந்தினிற் சிவனடி யவரில்
வந்து வாழகம் படியர்தம் குடிவளம்
பெறவே
செந்தி ருப்பதி யானநா ரணன்திரு
வடியைச்
சிந்தை கொண்டுல கோர்தொழச்
செயும்பர காலன். 2


2,3,4,5,6, குளகம். அகம்படியர் குலத்தில், நல்லறிவு அணுகிடவும், மாயை புவியை விட்டு ஓடவும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சதிரத்தில் ஒன்பது கோள்களும் உச்சத்தில் விளங்க, ஞானத்தின் கொழுந்து எழுந்தது போல் நாரணன் பெருமையை உணராதவர்களைப் பிளக்கும் கோடாரிபோல், பரகாலர் தோன்றினார். (பரகாலர் - திருமங்கையாழ்வார்.)

இந்த ஆதாரங்கள் மூலமாகவும் திருமங்கையாழ்வார் அவர்கள், "அகமுடையார் குலத்தில் அவதரித்தவர் என்பது விளங்கும். இதற்கு பிறகும் மாற்று சாதியினர் திருமங்கையாழ்வரை உரிமை பாராட்டுவது அவர்களின் வரலாற்றுக்கு அழகல்ல. அகமுடையார் உறவுகள் மற்றும் அமைப்புகள் தங்களின் பதிவுகளிலும், தாங்கள் அடிக்கும் விளம்பர பதாகைகளிலும், சுவரோட்டிகளிலும் அகமுடையார் குலத்தோன்றல் மன்னர் திருமங்கையாழ்வார் திருவுருவ படத்தினை பயன்படுத்தி அகமுடையார் வரலாற்றை மீட்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி: சோ.பாலமுருகன் அகமுடையார், பழனி


"நாங்கள் யார் என்பதை,எங்களது செயல்கள் வெளிப்படுத்தும்" - சுபா.முத்துகுமார்.

எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும், தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். தந்தையின் தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வளர்கிறார். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம் ஒரு காலத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பொங்கி வழியும் பூமியாக இருந்தது. அதனால் ஈர்க்கபெற்று, சக மாணவர்கள் திரைப்பட, சாதி தலைவர்களின் ரசிகர்களாக அடையாளம் எடுத்தபோது அண்ணன் சுபா.முத்துக்குமார் மணிக்கணக்கில் கார்ல் மார்க்சையும், சோவியத் யூனியனையும், மாவோவையும், சே’வையும் பற்றி பேசுவார் என்று விவரிக்கிறார்கள் அவரை சிறுவயதில் அறிந்த தோழர்கள்.

பின்னர் சிறிதுசிறிதாக ஜெயவர்தனே மற்றும் அதுலத் முதலி காலங்களில் ஈழத்திலே பற்றி எரிந்த தீ மெதுவாக சுபா.முத்துகுமாரையும் பற்றிக் கொள்கிறது. பழனியில் பள்ளிபருவத்திலேயே பல்வேறு அறப்போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார். ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ, தமிழக விடுதலையும் அத்துனை அவசியம் என்ற புரிதலுக்கு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தோழர் தமிழரசன் வழியில் ஆயுத போராட்டத்திற்கு வித்திடுகிறார். குட்டிமணி, தங்கத்துரைகளின் படுகொலைகள், ஈகி திலீபனின் தியாகம் போன்றவை முத்துகுமாரையும் ஈழத்திற்கு நேரிடையாக அழைக்கிறது.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத பயிற்சிக்காக தமிழீழம் சென்றார். அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலோடு சிங்கள படைகளுக்கு எதிராக விடுதலை புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கு பெறுகிறார். தொடர்ச்சியாக தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யபெற்று பணியாற்றுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ் தேசிய மீட்சிப்படையை தலைமையேற்று வழிநடத்துகிறார். அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக புலிகளுக்கு தேவையான அனைத்தையும் தொடர்ச்சியாக வேதாரணியம் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளிலிருந்து அனுப்பி வருகிறார். தலைவர் பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ரோமியோ மற்றும் நான்கு பெண்போராளிகள் உட்பட பதினாறு போராளிகளை வேலூர் சிறையில் இருந்து தப்ப வைக்கும் பொறுப்பு சுபா.முத்துகுமாரிடம் வழங்கபடுகிறது. இப்போது அறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹாலிவுட் திரில்லர் படங்களில் வரும் காட்சிகளைப்போல உலகே வியக்கும் வண்ணம் புலிகள் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள். அவர்கள் உட்பட 43 போராளிகளை மிகக்கடுமையான மத்திய காவல் மற்றும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்கு நடுவே கல்யாண வீட்டார் ‘கெட்டப்’போடு தமிழகத்தில் இருந்து தப்ப வைத்து விடுகிறார் முத்துக்குமார். அண்ணனின் சாதுர்யமும், சாமார்த்தியமும் பல போராளிகளையும், புலித்தலைமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பின் ஒருமுறை மணமேல்குடியில் விடுதலை புலிகளுக்கு அனுப்ப பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கபெற்றார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலை ஆகி தலைமறைவாகிறார்.

போராட்டம் சந்தனக்காட்டில் புதிய பரிமாணம் எடுக்கிறது. வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் சேர்ந்து தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிச்சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் கடத்தல் திட்டத்தை சிறையிலிருந்தே வகுக்கிறார். அந்த கடத்தல் வீரப்பனார் ஒப்புதலோடு தோழர்களால் செவ்வனே முடிக்கபெருகிறது. தமிழர்களின் சீவாதார பிரச்சினைகளான காவிரிநீர், பெங்களூரில் பல ஆண்டுகளாக திறக்கபடாது மூடி கிடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு, மலைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மற்றும் போராளி முத்துக்குமார் விடுதலை போன்ற கோரிக்கைகள் முன்வைக்கபடுகிறது. அதனால் பிறகு சிறையிலிருந்து பிணையில் வருகிறார்.

ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் சனநாயக அரசியலில் நெருக்கமாக ஈடுபடுத்திகொள்கிறார், பின் மீண்டும் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டுசென்றதாக அண்ணன் கொளத்தூர் மணியுடன் கூட்டு அதிரடிப்படையால் கைதாகி கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கன்னட சிறையில் அடைக்கபடுகிறார். நான்கரை ஆண்டுகாலம் சிறைவாழ்க்கை, பின் மீண்டும் பிணையில் வருகிறார்.

மெல்ல மெல்ல ஈழத்தில் போர் உச்சத்தை எட்டுகிறது. தமிழ் தேசிய சனநாயக அரசியலில் தீவிரமாகிறார். தொடர்ந்து இயன்ற வழிகளில் எல்லாம் புலிகளுக்கு தேவையானவற்றை அனுப்புகிறார். ஈழம் மெல்ல மெல்ல அழிகிறது. ராமேஸ்வரம் பிரச்சினையில் மதுரையில் பிணை இடுவதற்காக தங்கி இருந்த சீமானை சந்தித்து தனி தீவிர போர்க்குண அரசியல் பாதையை ஊக்குவிக்கிறார். தோழர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் அந்த பகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தோற்கடிக்க களப்பணியாற்றினார் (ஆனால் அதன் பின் தேர்தலில் சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது)

மதுரையில் "முள்வேலி தகர்த்தெறிவோம்" மாநாட்டை தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்சி பணிகளை தொடங்கி முழுமூச்சுடன் ஈடுபடும் வேளையில் புதுக்கோட்டை பெ.தி.க மாவட்ட பொறுப்பாளர் கரு. காளிமுத்து அவர்களின் புதல்வி மாதரசியை சாதி மறுப்பு மணம் முடிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் கொடி அறிமுகம் தஞ்சையில் முடித்து திரும்பும் வழியில் ஈழத்திற்கு மருந்துகள், ரத்த பைகள் அனுப்பியதாக கருணாநிதி அரசால் ஜாபர் சேட்டால் கைது செய்யபடுகிறார்.

ஒன்றரை மாதம் கழித்து வழக்கை உடைத்து வெளிவந்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பம்பரமாய் சுழன்ற அவர், அந்த பகுதிகளில் பல புலிக்குட்டிகளை வளர்த்தெடுக்கிறார். இவருடைய காலம் இதுவரையான நாம் தமிழர் வரலாற்றில் புதுக்கோட்டை, காரைக்குடி, தென் தஞ்சை மாவட்டங்களின் பொற்காலம் எனலாம். இந்த மூன்று மாவட்டங்களிலுமே அப்போதைய கருணாவின் ஆளுங்கட்சிக்கு இணையான செயல்பாடுகளை நாம் தமிழர் கொண்டிருந்தது என்பது ஆளுங்கட்சியினரே ஏற்றுக்கொண்ட வாதம். ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வளர்த்தெடுத்தார்.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக இந்த தமிழினத்தின் அறிவிக்கபடாத தளபதி மர்ம நபர்களால் புதுகை நகரின் மத்தியில், அண்ணா சிலை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடத்தில் பிப்ரவரி 16, 2011 அன்று கயவர்களால் வெட்டி வீழ்த்தபட்டார். இந்த பாதகத்தை செய்தது தனிப்பட்ட எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இது எதிரியும் அவனை சார்ந்த உற்றார் உறவினரும் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்பதை எளிதில் அவதானிக்க முடியும். ஆகவே, இது அரச பயங்கரவாதமா என்பது சிவகங்கை தொகுதியை உள்ளடக்கிய புதுகை மாவட்டத்தின் ‘சிதம்பர ரகசியம்’!

அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கு பெற்ற கொளத்தூர் மணி அவர்கள், என்னால் முத்துகுமார் பல நேரங்களிலும், அவனால் நான் பல நேரங்களிலும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம் என்றும் முத்துக்குமார் எனது சிறைத்தோழன் என்றும் சொன்னது அண்ணனை பற்றிய முத்தாய்ப்பாய் அமைகிறது.

அப்போது பேசிய அய்யா நெடுமாறன், முத்துகுமாரின் வீர தீரங்களை தாண்டி, எனக்கே சில நேரம் விளங்காத அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் வல்லவன் முத்துகுமார் என்றார்.

சீமான் பேசும்போது, நான் சமகாலத்தில் சந்தித்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவன் முத்துக்குமார், அவன் எனக்கு அரசியல் ஆசான் என்றார். முத்துகுமார் தூக்கிய ஆயுதத்தை விட அவன் சிந்தனை பேராபத்து என்று உணர்ந்தவர்கள் தான் அவனை சிதைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

தோழர் ஏகலைவன் கூறும்போது, அண்ணனோடு நெருங்கி பழகியதை வைத்து, போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, போராளிகளாகவே பிறக்கிறார்கள் என்பது உண்மையானால் இவன் அவ்வாறு பிறந்தவன் என்றார்.

சுருக்கமாக,

10 ஆண்டுகள் தமிழ் தேசிய விடுதலைக்காக சிறை வாழ்க்கை;

6 ஆண்டுகள் விடுதலைபுலிகளுக்கு உதவி செய்ததற்காக, தலைமறைவு வாழ்வு;

5 ஆண்டுகள் வீரப்பனாருடன் ஆயுதமேந்தி போராட்டம்;

5 ஆண்டுகள் மேதகு வே. பிரபாகரனுடன் தமிழீழ விடுதலை போராட்டம்;

4 ஆண்டுகள், நாம் தமிழர் இயக்கத்தை தோற்றுவித்து மக்கள் சனநாயக அரசியல் வாழ்க்கை.

சமகால தமிழ்த்தேசிய சூழலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த 'தமிழ் தேசிய போராளி' சுபா. முத்துகுமாருக்கு வீர வணக்கம்! 15.02.2019