தமிழ்கூறு நல்லுலகில் நீண்ட நெடிய வரலாற்று தொன்மைகளை தன்னுள் அடக்கியுள்ள முதுகுடி சமூகமான "அகமுடையார்" பேரினம். தனக்கான வரலாற்றை பொது வெளியில் பதிய வைக்கும் வரலாற்று கடமையை இதுகாலம் வரை செய்ய தவறிவிட்டது. அகமுடையார் வரலாற்றை முறையாக நாம் தொகுக்காத காரணத்தால், சில மாற்று தமிழ் சகோதர சாதிகள் தங்களின் வரலாற்றை படைக்கும்போது, பிற சமூகங்களின் வரலாற்றை தனது வரலாறாக உரிமை பாராட்டி திரிபு வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வரலாற்று திரிபு வேலையில் நமது வரலாற்று அடையாளமான சரித்திரநாயகனை நீண்டகாலமாக இரு சாதிகள் உரிமை பாராட்டி வருகின்றனர்.
அந்த சரித்திர நாயகன் யாரென்றால் மாலிய(வைணவ) சமயத்தின் ஆழ்வார்களில் ஒருவரான அகமுடையார் குல தோன்றல் "திருமங்கை ஆழ்வார்" மன்னர் ஆவார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஆய்விற்காக வாங்கிய நூல்களில் ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் அவர்கள் எழுதிய ’தமிழக வேளீர் வரலாறும் ஆய்வும்’ என்ற நூலில் 152 வது பக்கத்தில் "திருமங்கை மன்னர் என்ற அகம்படியச் சிற்றரசர்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நூல் எனக்கு திருமங்கை ஆழ்வார் அவர்களை பற்றிய தேடலை நோக்கி தூண்டியது.
சமீபத்தில் அகமுடையார் வரலாற்று ஆவண தேடலுக்காக சென்னையில் உள்ள பல்வேறு நூலகங்களில் அகமுடையார் வரலாற்றுக்கு தேவையான ஆவணங்களை தேடி அலைந்தபோது, மறைமலைஅடிகள் நூலகத்தில் ஒரு நூல் கிட்டியது. அந்த நூல் மாலிய(வைணவம்) சமயத் தொண்டர்களான ஆழ்வார்களின் வரலாற்றை உரைக்கும் நூலாகும்.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1971 ஆம் ஆண்டு வெளியிட்ட, ஊற்றத்தூர் விசய இராகவன் அவர்கள் எழுதிய "குருப்பரம்பரைப் புராணம், தொகுதி-2 நூலில், "திருமங்கையாழ்வார் திருவவதார என்ற அத்தியாயத்தில், திருமங்கை மன்னர் ’அகம்படியர் குலம்’ என்று பதியப்பட்டுள்ளது.
திருமங்கையாழ்வார் திருவவதார அத்தியாயம்:
பேதைநெஞ்சை! யின்றைப் பெருமை
யறிந்திலையே!
யேது பெருமையின்றைப் கென்னெனின்
-வோதுகின்றேன்
வாய்த்தபுகழ் மங்கையர்கோன்
மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்.
(உபதேச ரத்தினமாலை,பக்கம்;8)
"அகம்படியர் குலம்"
நிறையு மாமதி முகத்திய ரிளநகை
நிலவான்
நறைகொ ளாம்பலின் நாண்மலர்
நனைமுருக் கவிழும்
நிறையு நீர்மலித் தடங்களும் வயல்களும்
நிரம்பும்
குறைய லூரதன் பெருமையைக் கூறுத
லரிதால். 1
அந்த மாநக ரந்தினிற் சிவனடி யவரில்
வந்து வாழகம் படியர்தம் குடிவளம்
பெறவே
செந்தி ருப்பதி யானநா ரணன்திரு
வடியைச்
சிந்தை கொண்டுல கோர்தொழச்
செயும்பர காலன். 2
2,3,4,5,6, குளகம். அகம்படியர் குலத்தில், நல்லறிவு அணுகிடவும், மாயை புவியை விட்டு ஓடவும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சதிரத்தில் ஒன்பது கோள்களும் உச்சத்தில் விளங்க, ஞானத்தின் கொழுந்து எழுந்தது போல் நாரணன் பெருமையை உணராதவர்களைப் பிளக்கும் கோடாரிபோல், பரகாலர் தோன்றினார். (பரகாலர் - திருமங்கையாழ்வார்.)
இந்த ஆதாரங்கள் மூலமாகவும் திருமங்கையாழ்வார் அவர்கள், "அகமுடையார் குலத்தில் அவதரித்தவர் என்பது விளங்கும். இதற்கு பிறகும் மாற்று சாதியினர் திருமங்கையாழ்வரை உரிமை பாராட்டுவது அவர்களின் வரலாற்றுக்கு அழகல்ல. அகமுடையார் உறவுகள் மற்றும் அமைப்புகள் தங்களின் பதிவுகளிலும், தாங்கள் அடிக்கும் விளம்பர பதாகைகளிலும், சுவரோட்டிகளிலும் அகமுடையார் குலத்தோன்றல் மன்னர் திருமங்கையாழ்வார் திருவுருவ படத்தினை பயன்படுத்தி அகமுடையார் வரலாற்றை மீட்குமாறு வேண்டுகிறேன்.
நன்றி: சோ.பாலமுருகன் அகமுடையார், பழனி